tamilnadu

கிருஷ்ணகிரியில் உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி மையம்... தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்....

சென்னை:
உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி மையம் கிருஷ்ணகிரியில் அமைய உள்ளதாக தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு,“சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், காற்று மாசுப்படுவதை குறைக்கவும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள் ளது. இதற்காக, மின்சார வாகனங்களை அதிகம் உற்பத்தி செய்ய வசதியாக தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை-2019 ஏற்கனவே வெளியிடப் பட்டுள்ளது” என்றார்.தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய் யப்படும் மின்சார வாகனங்களுக்கு 2030 வரை மாநில ஜிஎஸ்டி வரி 100 சதவீதம் திரும்ப வழங் கப்படும். இத்தகைய நிறுவனங்கள் தொழிற்சாலை அமைப்பதற்காக நிலம் வாங்கும்போது 100 விழுக்காடு முத்திரைத்தாள் கட்டணத்தில் விலக்கு அளிக்கப் படும், 100 சதவீதம் மின்சார வரி விலக்கு அளிக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.கிருஷ்ணகிரியில் ஓலா நிறுவனம் 500 ஏக்கர் பரப்பளவில் உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி மையத்தை நடப்பு ஆண்டு இறுதிக்குள் அமைக்கவுள்ளது. இந்த ஆலையின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பத்தாயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

இந்த ஆலையில் இரு சக்கர வாகனத்துக்கு தேவையான அனைத்து உதிரி பாகங்களும் தயாரிக்க உள்ளதாகவும்,  3 ஆயிரம் ரோபோக்கள் வாகனங்கள் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட உள்ளதாகவும், இதன் மூலம் 2 வினாடிக்கு ஒரு மோட்டார் வாகனம் உற்பத்தி செய்ய உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

;