கோடக் சரக்கு போக்குவரத்து நிதியம் அறிமுகம்
சென்னை, நவ.26- கோடக் மகிந்திரா சொத்து மேலாண்மை லிமிடெட் நிறுவனம் கோடக் போக்குவரத்து & சரக்கு நிதியத்தை நவ.25 அன்று அறிமுகம் செய்துள்ளது.
இது ஒரு திறந்த நிலை முதலீட்டுத் திட்டம் ஆகும். போக்குவரத்து மற்றும் சரக்கு கையாள்வதை மையக்கருத்தாகக் கொண்ட இத்திட்டத்தில் நவம்பர் 25 முதல் 9 டிசம்பர் வரை முதலீடு செய்யலாம்.
இத்திட்டம் போக்குவரத்து மற்றும் சரக்கு கையாள்வது தொடர்புடைய நிறுவனங்களின் பங்குகள் மற்றும் பத்திரங்களில் அதிகபட்சமாக முதலீடு செய்து நீண்ட கால மூலதன வளர்ச்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நிலேஷ் ஷா கூறியுள்ளார். இதில் போக்குவரத்து உட்கட்டமைப்பு, சரக்கு கையாளும் சேவைகள் நிறுவனங்களும் அடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தங்கம் விலை சற்று குறைந்தது
சென்னை, நவ. 26- தங்கத்தின் விலை 2-வது நாளாக செவ்வாயன்று அதிரடியாக குறைந்தது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.56,640-க்கும், கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.7,080-க்கு விற்பனையானது. அதேபோல வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி ரூ.3 விலை குறைந்து ரூ.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களில் ரூ1,760 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.