tamilnadu

img

வருவாய் நிர்வாக ஆணையராக பணீந்திர ரெட்டி

சென்னை:
தமிழ்நாடு வருவாய் நிர்வாக ஆணையராக பணீந்திர ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ”வருவாய் ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன் சுகாதாரத் துறைச் செயலராக மாற்றப்பட்டதால், வருவாய் நிர்வாக ஆணையராக பணீந்திர ரெட்டி ஐஏஎஸ் நியமிக்கப் பட்டுள்ளார். இவர் ஏற்கனவே வகித்து வந்த இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையர் பொறுப்பைக் கூடுதலாகக் கவனிப்பார்.நில நிர்வாக ஆணையராகப் பொறுப்பு வகிக்கும் பங்கஜ் குமார் பன்சால் தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார். நில நிர்வாக ஆணையர் பொறுப்பைக் கூடுதலாகக் கவனிப்பார்” என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.