tamilnadu

img

ஜெ. நினைவு இல்லம் ஜன.28ல் திறப்பு....

சென்னை:
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 28 ஆம் தேதி திறந்து வைக்கிறார்.தமிழகத்தின் முதலமைச்சராக வும், அதிமுக-வின் பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெ. ஜெயலலிதா, 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 தேதி மரணம் அடைந்தார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் ரூ.57.8 கோடி மதிப்பில் பீனிக்ஸ் பறவை வடிவத்தில்  நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளன.

இதையடுத்து ஜெயலலிதாவின் நினைவிடத்தை ஜனவரி 27 ஆம் தேதி) ஜெயலலிதா நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்கிறார்.சென்னை போயஸ் தோட்டத்தில் அரசுடைமையாக்கப்பட்ட ஜெயலலிதா நினைவு இல்லம் ஜன.28 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.

;