சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் “ஆதித்யா எல் - 1” என்ற விண்கலத்தை ஏவியது. இந்த விண்கலம் சூரியனை நோக்கி சுமார் 15 லட்சம் கி.மீ கடந்து சென்றுள்ள நிலையில், வெள்ளியன்று “ஆதித்யா எல் - 1”விண்கலம் சூரியனின் வெளிப்புறப் பகுதியை புறஊதா அலைநீளங்களில் படம்பிடித்து அனுப்பியுள்ளது.