tamilnadu

மணல் அள்ள தடை விதித்திடுக: துரைமுருகன்

சென்னை, ஜூலை 11 - வேலூர் கலசம்பட்டு பகுதியில் பாலற்றில் இருந்து மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரை முருகன் வலியுறுத்தினார். பேரவையில் வியாழ னன்று (ஜூலை 11) பேசிய  அவர், பாலாற்றில் கலசம் பட்டு அருகே மணல் எடுப்ப தாக மக்கள் முறையிட்ட னர். அது தொடர்பாக ஆட்சி யரிடம் முறையிட்டேன். வறட்சி தண்ணீர் பஞ்சம் உள்ள நிலையில் மணலை எடுத்தால் தண்ணீர் கிடைக் காது என்றேன். அதற்கு ஆட்சியர், வீடுகட்ட மணல் கேட்கிறார்கள். எனவே அனு மதி அளித்தேன் என்கிறார். எனவே, அரசு தலையிட்டு மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும் என்றார். அதற்கு பதிலளித்த கனிம வளத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், இது தொடர்பாக முதல்மைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார்.