tamilnadu

img

ஷாக் அடிப்பது மின்சாரமா? கட்டணமா?

சென்னை:
மின்கட்டணத்தை பார்த்தால், நமக்குள் மின்சாரம் பாய்தது போல் இருக்கிறது என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக அரசின் மின்கட்டண கொள் ளையை கண்டித்து திமுக சார்பில் ஜூலை 21 அன்று போராட்டம் நடைபெறுகிறது. இதனையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளகாணொலி உரையில் கூறியிருப்பதன் சுருக்கம் வருமாறு:கொரானா தொற்று ஏற்பட்டால் மக்கள் எந்த அளவுக்கு அதிர்ச்சியும் மனவேதனையும் அடைவார்களோ, அதைவிட அதிகமாக ஒவ்வொரு வீட்டிற்கும் வந்திருக்கின்ற மின் கட்டணத்தைப் பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். மின் கட்டணத்தைப் பார்த்தால் மின்சாரம் நமக்குள் பாய்ந்தது போல் இருக்கிறது.ரீடிங் எடுத்ததிலும் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. மின்சாரத்தை பயன்படுத்தும் அளவை பொறுத்து கட்டம் கூடும் குறையும். ஆனால் ஒவ்வொரு குடும்பத்துக் கும் வந்திருக்கின்ற கட்டணம் அநியாயத் திற்கு அதிகமாக இருக்கிறது.

இரண்டு மாதத்துக்குச் சேர்த்து எடுக்கும் போது ஸ்லாப் மாறும். ஸ்லாப் மாறினால் கட்டணமும் எகிறும். இது மின்சார வாரியத்துக்கு லாபமாக இருக்கலாம். ஆனால் மக்களுக்கு எவ்வளவு பெரிய பளு. கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் மின் கட்டணச் சலுகை கொடுத்திருக்கின்றன. ஆனால் தமிழக அரசு கொடுக்க மறுக்கிறது.எனவே, மக்களின் குரலைக் கோட்டைக் குச் சொல்வதற்காகத்தான் வரும் 21-ம் தேதி செவ்வாய்க்கிழமை கறுப்புக்கொடி தாங்கி கண்டன முழக்கத்தை எழுப்புவோம்,

;