மதுரை, ஜூலை 14- முறைசாரா தொழிலாளர் நலவாரியங்கள் தொழிலா ளர்களுக்கு வழங்கப்படும் பலன்களை இரட்டிப்பாக்க வலி யுறுத்தி தமிழகம் முழுவதும் நலவாரிய அலுவலகங்கள் முன்பு ஆகஸ்ட் 1-ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் ஆர்.சிங்காரவேலு கூறி னார். மதுரையில் சனிக்கிழமை தொடங்கிய இந்திய தொழிற் சங்க மையத்தின் 9-ஆவது மாவட்ட மாநாட்டை துவக்கி வைக்க வருகை தந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முறைசாராத் தொழிலாளர்களுக்கு வேலை பாதுகாப்பு. சமூகப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். நல வாரிய முத்தரப்புக்குழுக்களில் சிஐடியு பிரதிநிதிகள் இடம் பெறவேண்டும். மற்ற மாநிலங்களில் உள்ளது போல் நல வாரிய பணப்பலன்களை உயர்த்த வேண்டும். தமிழக முறைசாரா வாரியங்களில் கல்வி, திருமணம், பிரசவம், பென்சன் போன்றவைகளுக்கான பணப்பலன்களை விதிமுறைகளுக்குட்பட்டு நலவாரிய உறுப்பினர்களுக்கு கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை நலவாரியத்திற்கு தேவையான நிதியை உடனடியாக வழங்க வேண்டும். மதுரை நலவாரிய அலுவலகத்தில் சிறிய பெயர் பிழை திருத்தம், வயது போன்ற காரணங்களைக் கூறி விண்ணப்பங் களை புறக்கணிப்பது, புதுப்பித்தலை விதிமுறைக்கு மாறாக புதுப்பிக்க மறுப்பது, பென்சன் வழங்கும்போது வாரிய அட்டையில் உள்ள வயதை எடுக்க மறுப்பது, மனுக்களை கால தாமதம் எனக்கூறி புறக்கணிப்பது என்பது தொடர்கிறது. முறைசாரா தொழிலாளர்களின் நலன் பாதுகாக்க உரு வாக்கப்பட்ட படிக்காத ஏழை தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட முறைசாரா, கட்டுமான தொழிலாளர்களின் வாரியத்தை சிதைக்கத் துடிக் கும் மாநில அரசைக் கண்டித்தும், நலவாரிய நிர்வாகத்தைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முற்று கைப் போராட்டம் நடைபெறுகிறது. மதுரையிலும் இந்தப் போராட்டம் நடைபெறும் என்றார்.