tamilnadu

img

ஆயிப்பேட்டை மணல் குவாரியை தொடர்ந்து இயக்க வலியுறுத்தல்

கடலூர், ஜூலை 1- சிதம்பரம் வட்டம் ஆயிப்பேட்டை யில் திறக்கப்பட்ட மணல் குவாரியை தொடர்ந்து இயக்க வேண்டும் என கடலூர் மாவட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக் கப்பட்டது.  இதுகுறித்து சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.கருப்பையன், மாட்டு வண்டி சங்கத்தின் மாவட்டச் செய லாளர் வி.திருமுருகன், மாவட்டத் தலைவர் எஸ்.பொன்னம்பலம், மாவட்டப் பொருளாளர் செல்வராஜ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் பட்டை நாமம் போட்டுக்கொண்டு ஆட்சியரி டம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதா வது, சிதம்பரம் வட்டத்தில் பல போராட்டங்களுக்குப் பிறகு அரசு அனுமதியுடன் மாட்டுவண்டி மணல் குவாரி  ஆயிப்பேட்டையில் திறக்கப்  பட்டு எந்தவிதப் பிரச்சினையு மில்லாமல் இயங்கி வருகிறது. அந்த  குவாரியில் அரசு கூறிய அனைத்து விதிமுறைகளும் சரியான முறை யில் கடைபிடிக்கப்பட்டு மாட்டு வண்டி தொழிலாளர்கள் மணல் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 10  தினங்களாக மாட்டுவண்டி மணல்  குவாரி இயங்காமல் நிறுத்தப்பட்டுள் ளது. மணல் எடுக்க அந்த கிராம  மக்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க வில்லை. வேறு ஊரில் செங்கல் சூளை வைத்துள்ள ஒரு சிலர் திருட்டுத்தனமாக மணல் எடுப்  பதை, மாட்டுவண்டித் தொழிலாளர் கள் வெளியே கூறி விடுவார்கள் என்ற  காரணத்தினால், பொய்யான தக வல்களை கூறி குவாரியில் பிரச்சனை  செய்து வருகின்றனர். மணல் குவாரி இயங்காததால் சுற்றுவட்டாரப் பகுதி யில் கட்டுமானத் தொழில் பெரியள வில் பாதிக்கப்படும். மேலும் மாட்டு  வண்டி தொழிலாளர்களின் வாழ்வா தாரம் கேள்விக்குறியாகும். இந்த மணல் குவாரியை இயக்கவிடாமல் சில சமூக விரோதிகள் செயல்படு கின்றனர். எனவே மாட்டு வண்டி  தொழிலாளர்களின் வாழ்வா தாரத்தை பாதுகாக்க அரசு அனுமதித்  துள்ள மணல் குவாரியை தொடர்ந்து  இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்  பட்டுள்ளது.