tamilnadu

உயர் படிப்புக்காக ரஷ்யா செல்லும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை,டிச. 29- உயர் படிப்புக்காக ரஷ்யா செல்லும் தமிழக மாணவர்க ளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள தாக சென்னையில் உள்ள ரஷ்ய  துணைத்தூதர் ஒலெக் என்  அவ்டீவ் கூறினார். சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர் இந்தியா வில் இருந்து ரஷ்யாவுக்கு உயர் கல்வி கற்க வரும் மாணவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டை  விடஇந்தாண்டு 30 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றார். இதில் 85 விழுக்காடு மாணவர்கள் மருத் துவ கல்வி பயில வருகின்ற னர் என்றார். பொறியியல், அணு சக்தி, வணிக மேலாண்மை உள் ளிட்டவை இந்திய மாணவர்கள் விரும்பும் இதர படிப்புகள் ஆகும். சமீபத்தில் இந்திய ரஷ்ய தலைவர்கள் இடையே நடை பெற்ற உச்சி மாநாட்டின் போது பாதுகாப்பு, அணுசக்தி, விண் வெளி உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளும் மேலும் விரிவாக ஒத்துழைத்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது என்றார். சென்னை- விளாடிவாஸ்டாக் துறைமுகங்களுக்கு இடையே கப்பல் போக்குவரத்து தொடர்பை ஏற்படுத்துவதற்கு  இரு நாடுக ளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள தாகவும் அவர் கூறினார். ரஷ்யாவின் கிழக்கு பகுதி யான விளாடி வாஸ்டாக் துறை முகத்தில் இருந்து இந்தியாவுக்கு நிலக்கரி, பெட்ரோலியம், கச்சா  எண்ணை ஆகியவை ஏற்றுமதி செய்யப்படுகிறது. பாதுகாப்பு வீரர்களுக்கான புல்லட் புருப் ஜாக்கெட்டுகளை வடிவமைத்து உற்பத்தி செய்வது குறித்து இந்தி யாவும் ரஷ்யாவும் பேச்சு நடத்தி  வருவதாக இந்திய ரஷ்ய வர்த்தக அமைப்பின் செயலாளர் தங்கப் பன் கூறினார். இந்தப் பேச்சு வார்தை துவக்க நிலையில் உள்ள தாகவும் அவர் தெரிவித்தார். கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் 3வது அணு உலை கட்டுப்மானப்பணிகள் 2023ல் முடியும் என்று துணைத்தூதர் ஒலெக் என் அவ்டீவ் கூறினார்.

;