tamilnadu

img

தொழிலாளர் பிரச்சனைகள் தொடர்பாக சந்திக்க மறுக்கும் மின்வாரிய தலைவர்... தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு ஆர்ப்பாட்டம்

சென்னை:
தொழிற்சங்கத் தலைவர் களை சந்திக்க மறுக்கும் மின்வாரியத் தலைவரை கண்டித்து வியாழனன்று (ஆக.13) சென்ணை அண்ணாசாலையில் உள்ள வாரிய தலைமையகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மின்வாரிய தலைவராக ஒன்றரை மாதம் முன்பு பவன் குமார் பன்சால் நியமிக்கப்பட்டார்.  அவர் பதவியேற்றது முதல் தொழிற்சங்கத் தலைவர்களை சந்திக்க மறுப்பதாக கூறப் படுகிறது.ஊரடங்கு காலத்திலும் பணியாற்றும் வாரிய ஊழியர்களுக்கு, அரசின் சலுகைகள் (அரசாணை 304, 401) கிடைக்காமல் உள்ளது. இவற்றை பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளார்.இதனைக் கண்டித்து தமிழ் நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பி.வி.சேவியர், 4500 காலிப்பணியிடம் நிரப்பப் படாமல் உள்ளது. பஞ்சப்படி, சரண்டர் முடக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் ஊர்மாற்றம் செய்யப்படுகின்றனர். தொழிற் சங்கங்களை ஆலோசிக்காமல் எண்ணூர் அனல்மின் நிலைய ஊழியர்கள் நூற்றுக்கும் மேற் பட்டோர் ஊர்மாற்றம் செய்யப் பட்டுள்ளனர் என்றார்.

வாரியத் தலைவரும், இணை மேலாண்மை இயக்குநரும் ஒப் பந்தத்தை அமல்படுத்த மறுக்கின் றனர். பதவிகளை ஒழித்துக் கொண்டு வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.இந்தப்போராட்டத்தில் தி.ஜெய்சங்கர், எஸ்.ராஜேந்திரன் (சிஐடியு), மணிமாறன் (தொமுச), சுப்பிரமணியம் (எச்எம்ஸ்) சந்திரசேகரன் (ஏஇஎஸ்யு), தனசேகர் (தொழிலாளர் சம்மேளனம்), சேக்கிழார் (ஊழியர் சம்மேளனம்), செல்வராஜ் (ஜனதா), ரவிச் சந்திரன் (என்எல்ஓ) உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

;