tamilnadu

சித்தமருத்துவத்தில்  1000 பேர் குணமடைந்தனர்

 சென்னை, ஜூலை 13- சென்னை சாலிகிராமம், வியாசர்பாடி கொரோனா சித்த  மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்ற 1041 கொரோனா நோயாளிகள் குணமடைந்தனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளி களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் சாலிகிராமம், வியாசர்பாடியில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சாலிகிராமத்தில் தனியார் கல்லூரியில் உள்ள மையத்தில்  931 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது அங்கு 279 ஆண்கள்  133 பெண்கள் உள்ளிட்டு 412 பேர் சிகிச்சையில் உள்ளனர். வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக்கல்லூரி யில் உள்ள சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் 110 பேர் குணமடைந்துள்ளனர். 118 பேர் சிகிச்சையில் உள்ளனர்.