மாவட்டச் செயலாளர் எஸ். கோபால் எச்சரிக்கை
திருவள்ளூர் நவ-28 மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கடசி சார்பில் குடிமனை பட்டா கேட்டு ஊத்துக்கோட்டை வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் வியாழனன்று (நவ.28) நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால் பேசுகையில், ‘அரசு புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்களில் நீண்ட காலமாக குடியிருக்கும் அனைவருக்கும் குடிமனை பட்டா வழங்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதன டிப்படையில் கும்மி டிப்பூண்டி, மீஞ்சூர், பொன்னேரி, சோழவரம், ஊத்துக்கோட்டை, திருத்தணி ஆகிய வட்டங்க ளில் குடியிருக்கும் 2 ஆயிர த்திற்கும் மேற்பட்ட மக்கள் சிபிஎம் தலைமையில் மனுக்களை வழங்கியுள்ள னர். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காலம் தாழ்த்தினால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பும், பட்டா கிடைக்கும் வரை காத்திருக்கும் போராட்ட த்தில் ஈடுபடுவோம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊத்துக்கோட்டை
ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் நடந்த போராட்ட த்திற்கு வட்டச் செயலாளர் ஏ.ஜி.கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.பன்னீர்செல்வம், மாவட்டக்குழு உறுப்பின ர்கள் ஆர்.தமிழ்அரசன், பி.ரவி, சி.பாலாஜி, என்.கங்காதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பீடி தொழி லாளர்கள், மாளந்தூர், தண்டலம், ஆவாஜிபேட்டை, மதுரவாசல், வண்ணா ங்குப்பம், காக்கவாக்கம், பூச்சியத்திப்பேடு கிராமங்களில் இருந்து 400கும் மேற்பட்ட மக்கள் ஊர்வலமாகச் சென்று மனு அளித்தனர்.
திருத்தணி
திருத்தணியில் நடை பெற்ற போராட்டத்திற்கு வட்டச் செயலாளர் அப்சல் அகமது தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.செல்வராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் அந்தோணி ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக எல்.என்.கண்டிகை, டீ.புதூர், செருக்கனூர், பங்களா மேடு, ராமாபுரம், புஜ்ஜி ரெட்டிப்பள்ளி ஆகிய கிரா மங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட திருத்தணி நெடுச்சாலையிலிருந்து ஊர்வலமாகச் சென்று அதிகாரியிடம் மனு கொடுத்தனர்.