சென்னை, ஜூன் 24- தமிழ்நாடு சட்டப்பேரவையில் திங்கட்கிழமை பள்ளி - உயர் கல்வித்துறை மற்றும் வருவாய்த் துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பாமக சட்ட மன்ற தலைவர் கோ.க. மணி, சாதி வாரி கணக்கெடுப்பு மற்றும் 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு விவகா ரத்தில் முன்னுக்குப் பின் முரணாக பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், “20 விழுக்காடு இட ஒதுக்கீடு இருக் கின்ற காரணத்தால் தான், வட மாவட்டங்களில் இன்றைக்கு 10.5 விழுக்காடு என்று நீங்கள் கேட்கிற விழுக்காட்டை விட கூடுதலாக வன்னியர் சமூகத்து மக்கள் தங்க ளுக்கான உரிமையைப் பெறுகி றார்கள்.
அத்தனை புள்ளிவிவரங்க ளும் உங்களுக்கு வழங்கப்பட்டி ருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், டிஎன்பிஎஸ்சி வரைக்கும் புள்ளி விவரம் எடுக்கப்பட்டதிலே, 10.5 விழுக்காட்டைத் தாண்டிதான் வன்னியர்கள் இந்த 20 விழுக்காடு இட ஒதுக்கீடு இருக்கின்ற கார ணத்தால் பெறுகிறார்கள். நீங்கள் கேட்பது, அதனைக் குறைத்து கொடுப்பதற்கான வழியைத்தான் வகுத்துக் கொடுக்கும்” என்றார்.
தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டிற் காக போராட்டம் நடந்த போது காக்கைக் குருவி போல் சுட்டுக் கொன்றது யார்? என்பதை மறந்து விட்டு அவர்களுடன் கூட்டணி அமைத்தீர்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, தேர்தல் நாள் அறிவிக்கின்ற அன்று உங்களுக் குள் பேசிக்கொண்டு அந்த 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அறி விக்கை செய்து நீங்கள் உங்கள் கூட்டணியை அறிவித்தீர்கள். அந்த 10.5 சதவிகிதம் அரை வேக்காட்டுத்தனமான அவசர கோலத்தில் அள்ளித் தெளிக்கப் பட்டது என்பது உங்களுக்கும் தெரி யும். அது நீதிமன்றத்தால் நிராக ரிக்கப்பட்டு இருக்கிறது. நிராகரிக் கப்பட்ட பிறகும் நீங்கள் அவர்கள் (அதிமுக) இட ஒதுக்கீடு வழங்கி யது போல சொல்லித்தான், நீங்கள் தேர்தலை சந்தித்தீர்கள்.
20 விழுக்காடு இடஒதுக்கீடு கொடுத்த திமுகவை எதிரியாகக் காட்டினீர்கள். இந்த நாடாளு மன்றத் தேர்தலிலே 10.5 விழுக்காடு கொடுத்த அதிமுகவையும் கை விட்டு விட்டீர்கள். எந்தக் கட்சி சமூக நீதிக்கு எதி ராக இருக்கிறதோ அந்த பாஜக கட்சியுடன் கைகோர்த்து இருக்கி றீர்கள். சமூக நீதியை ஒட்டுமொத்த மாக நிராகரிக்கிற பாஜகவை இன்றைக்கு தமிழகத்தில் தூக்கிப் பிடிக்கிறவர்கள் நீங்களாகத்தான் இருக்கிறீர்கள். எப்படி ஒரே நேரத் தில் இத்தனை விதமாக பேச முடி கிறது என்பது விந்தையாக இருக்கி றது.
அரசியல் ஆதாயத்திற்காக விக்கிரவாண்டி இடைத்தேர்தலை மனதில் கொண்டு திமுக மீது- திமுக அரசு மீதும் பழி சுமத்துவது பாமக வுக்கு அழகல்ல!” என்று கூறினார். மீண்டும் பேசிய கோ.க. மணி, “கலைஞர் கொண்டு வந்த திட்டங் கள் அவர் அறிவித்த இட ஒதுக்கீடு எதையும் நான் கூறவில்லை” என்றார். மீண்டும் குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் சிவசங்கர், “20 விழுக் காடு கொண்டு வந்த திமுகவையும் 10.5 விழுக்காடு கொண்டு வந்த அதிமுகவையும் உதறிவிட்டு சமூக நீதிக்கு எதிராக நீங்கள் புலி வாலைப் பிடித்து விட்டீர்கள். அந்த புலி வாலை பிடித்துக் கொண்டே போகிறீர்கள். புலியும் உங்களை விடாது. வாலையும் நீங்கள் விட முடியாது” என்று கூறியதும் சட்டப் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.