சென்னை, ஜூலை 4 - வீடுகளில் பொருத்தப் பட்டுள்ள டிஜிட்டல் மீட்டர்களை மாற்றி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும் என்று மின் துறை அமைச்சர் பி.தங்கமணி கூறினார். பேரவையில் வியாழனன்று (ஜூலை 4) மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மீதான மானியத்தின் மீது நடைபெற்ற விவாதம் வருமாறு:
செந்தில்பாலாஜி (திமுக): விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் அமைதி யாக போராடி வருகின்றனர். 6 பெண்கள் உட்பட 17 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள னர். மின்கோபுரம் அமைக்க அதிகாலையில் காவல்துறை யினரோடு அதிகாரிகள் வீட்டிற்கு சென்று விவசாயிகளை மிரட்டி ஒப்புதல் கடிதம் பெறு கின்றனர். இவற்றை கைவிட்டு நெடுஞ்சாலையோரம் புதைவட மாக மின்சாரத்தை கொண்டு செல்ல வேண்டும்.
மின்துறை அமைச்சர் தங்கமணி: புதைவடமாக கொண்டு செல்ல சாத்தியமில்லை. ராமசாமி (காங்.): தட்கல் முறையில் பணம் செலுத்தி காத்தி ருக்கும் விவசாயிகளுக்கு எப்போது இணைப்பு வழங்கப்படும். அமைச்சர்: கஜா புயல் காரணமாக அந்தப்பகுதியில் மொத்த மின் அமைப்பையும் மாற்றி அமைக்க வேண்டி உள்ளது. விரைவில் பணிகள் முடிந்து இணைப்பு வழங்கப்படும்.
ஸ்மார்ட் மீட்டர்
பிரின்ஸ் (காங்): மின்கட்ட ணம் காலம் தவறி கணக்கிடப்படு வதால் பொதுமக்கள் அதிக கட்ட ணம் செலுத்த வேண்டி உள்ளது. ஒரு சில இடங்களில் அதிகமாக வசூலிக்கின்றனர்.
அமைச்சர்: தற்போது டிஜிட்டல் மீட்டர்கள் பொருத் தப்பட்டு மின்கட்டணம் முறையாக கணக்கிடப்பட்டு வருகிறது. அதில் சில பிரச்சனைகள் வந்துள்ளன. விரைவில் வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும். பொதுமக்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு ஏற்ப வைப்புக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மக்கள் அளவாக குடிக்க வேண்டும்
பிரின்ஸ் (காங்): கேரளாவில் மதுக்கடைகளை எதிர்த்து மக்கள் போராடவில்லை. தமிழகத்தில் போராடுகிறார்கள். மதுபானங்க ளில் அதிக ஆல்கஹால் கலந்திருப்பதால் மக்களின் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. படிப்படியாக கடைகள் மூடப்படும் என்றீர்கள். எப்போது மதுவிலக்கு வரும்?
அமைச்சர்: மக்கள் அளவாக குடிக்க வேண்டும். இதற்காக 3 கோடி ரூபாய் ஒதுக்கி விழிப்புணர்வு செய்து வருகிறோம். பூரண மதுவிலக்குதான் அரசின் கொள்கை. படிப்படியாக கடைகளை மூடுவோம்.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி (திமுக): வீட்டிலேயே பீர் தயாரிக்க அனுமதிக்கப்போவதாக செய்திகள் வருகின்றன. அமைச்சர்: வீட்டிலேயே பீர் உற்பத்தி செய்யும் திட்டம் அமல் படுத்தப்படமாட்டாது. இவ்வாறு அந்த விவாதம் நடைபெற்றது.