tamilnadu

ரூ.4 கோடி பறிமுதல்: சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நயினார்

சென்னை, ஏப். 22 - கடந்த ஏப்ரல் 6 அன்று இரவு, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து நெல்லை சென்ற விரைவு ரயிலில் ரூ. 4 கோடி பணத்தை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த விவகாரத்தின் முக்கிய புள்ளியான பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது.

ஏப்ரல் 22 அன்று ஆஜ ராகுமாறு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், நயினார் நாகேந்திரன் ஆஜராகவில்லை. தன்னால் ஆஜ ராக முடியாது என்று கூறி, தனது வழக்கறிஞர் மூலம் இன்னும் 10 நாட் கள் கால அவகாசம் கேட்டுள்ளார் பாஜக வேட்பாளர் நயினார்.

இதனிடையே, நயினார் நாகேந் திரனின் ஹோட்டல் ஊழியரிடம் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக அமலாக்கத்துறை விசா ரணை நடத்தக் கோரி சுயேச்சை வேட்பாளர் ராகவன் என்பவர் வழக்கு  தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதி பதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் சுந்தர்  மோகன் அமர்வில் விசாரணைக்கு திங்களன்று வந்தது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “தேர்தலின் போது பணம் பறிமுதல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு, சட்டவிரோத  பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில் பட்டி யலிடப்பட்ட குற்றமாக கருத முடி யாது” என்றார். இருப்பினும், இது சம்பந்தமாக அமலாக்கத்துறையின் விளக்கம் பெற்று தெரிவிப்பதாக கூறினார். இதையடுத்து, இந்த மனு வுக்கு ஏப்ரல் 24-ஆம் தேதிக்குள் பதி லளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணை யை அன்றைய தினத்திற்கு தள்ளி வைத்தனர்.

;