tamilnadu

ஆன்லைன் அபராதங்களால் கடும் நெருக்கடி

ஆன்லைன் அபராதங்களால் ஆட்டோ  தொழிலாளர்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறார் கள் என சிஐடியு சம்மேளனம்,தமிழக அரசுக்கு சுட்டிக்காட்டிள்ளது.

தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின்(சிஐடியு) மாநிலக் குழு கூட்டம் 25.08.2024 அன்று சம்மேளன துணைத் தலைவர் ஜே.முஹம்மது அனிபா தலைமையில் கோவில்பட்டியில் நடை பெற்றது. 

கூட்டத்தில் சிஐடியு மாநிலச் செய லாளர் எஸ்.கே மகேந்திரன், பொதுச் செய லாளர் எம்.சிவாஜி, பொருளாளர் உமா பதி, துணைப்பொதுச் செயலாளர்கள் எம்.சந்திரசேகரன், ஆர் முருகன் உட்பட சம்மேளனக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

“தமிழ்நாட்டில், கட்டணம் மாற்றி யமைக்கப்பட்டு, ஆட்டோ செயலி அம லாக்கப்படும் என்ற அரசின் அறிவிப்புகள் இன்று வரை அமுலாக்கப்படவில்லை.

அதேபோல் அங்கீகாரம் இல்லாத சட்டவிரோத பைக், டாக்ஸி அனைத்து மாநகராட்சி, நகராட்சி பகுதிகளிலும், பொதுமக்களின் உயிருக்கு பாது காப்பில்லாத வகையில் செயல்பட்டு வருகிறது.     இதனை வட்டாரப் போக்கு வரத்து அதிகாரிகள், காவல் துறை அதிகாரி கள் கண்டுகொள்ள மறுத்து வரு கிறார்கள். தமிழகம் முழுவதும் வழிப்பறி போல் நடந்து வருகிற ஆன்லைன் அபரா தங்களால் ஆட்டோ தொழிலாளிகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறார்கள். தங்கள் வருமானத்தில் பெரும் பகுதியை வட்டார போக்குவரத்து அலுவலகப் பணி களுக்கு செல்லும்போது, கட்ட வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்படுகிறார்கள்.

எனவே  தமிழக அரசாங்கம் உறுதி யான தலையீடு செய்து, ஆட்டோ தொழி லாளர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கின்ற ஆன்லைன் அபராதம், பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும்.    மீட்டர் கட்ட ணம் மாற்றி அமைத்து, ஆட்டோ செயலி யை அமுலாக்க வேண்டும் என வலி யுறுத்தி செப்டம்பர் மாதம் 24 அன்று தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்கு வரத்து அலுவலகங்கள், மற்றும் போக்கு வரத்து ஆய்வாளர் அலுவலகங்கள் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவதோடு, கோரிக்கை மனுக்களை வழங்குவது என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.