tamilnadu

img

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை:
நாகை, திருவாரூர், தஞ்சை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங் களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தமிழக வானிலை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தென் தமிழகக் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உண்டு. புதுவை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குமரிக் கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் கடற்காற்று வீசக்கூடும். எனவே அடுத்த 24 மணி நேரத்துக்கு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை இந்த மாதம் வரையிலான நிலவரப்படி வழக்கத்தை விட சராசரியாக 3 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. ஆனால் சென் னையை பொறுத்தவரை 17 சதவீதம் குறைவாக பெய் துள்ளது. மழை குறைவாக பெய்துள்ள இடங்களில் புதுவை முதல் இடத்தில் உள்ளது. இங்கு 33 சதவீதம் குறைவாக பெய்துள்ளது.அதற்கு அடுத்ததாக பெரம்பலூரில் 28 சதவீதம், வேலூரில் 26 சதவீதம், மதுரையில் 24 சதவீதம் மழை குறைவாக பெய் துள்ளது.இவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

;