தமிழக கல்வி முறையை
குறை சொல்வதா?
உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
தமிழக கல்வி முறையை குறை சொல்வதா? உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
சென்னை அருகே மறைமலை நகரில் நடைபெற்ற திமுக நிர்வாகி திருமண விழாவில் பங்கேற்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “இந்தியாவிலேயே சிறந்த கல்வி முறை ஒன்று இருக்கிறது என்றால் அது தமிழ்நாட்டில் தான்”என்றார்.
மேலும் அவர் பேசுகையில், தமிழக பாடத்திட்டத்தில் படித்தவர்கள் இன்று பல்வேறு தளங்களில் உயர்ந்த நிலையில் உள்ளனர். தமிழக பாடத்திட்டத்தில் படித்தவர்கள் விஞ்ஞானிகளாகவும், மிகப்பெரிய மருத்துவராகவும் உள்ளனர். சில வயிற்றெரிச்சல் பிடித்தவர்கள் இதை ஏற்க முடியாமல்தான் மாநில அரசின் கொள்கை மீது குற்றம் சொல்கிறார்கள். ஆசிரியர் பணி அறிவார்ந்த தலைமுறையை உருவாக்கும் பணி. தமிழக பாடத்திட்டத்தை யார் குறை சொன்னாலும் ஏற்க முடியாது.
தமிழ்நாடு பாடத்திட்ட முறையை குறை கூறினால் தமிழக ஆசிரியர்கள், மாணவர்களை அவமதிப்பதற்கு ஒப்பாகும். மாணவர்கள் சுயமாக சிந்தித்து செயல்பட தூண்டுவதுதான் சிறந்த கல்வி முறை. தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் பயில்பவர்கள் தான், வருங்காலத்திலும் சிறந்து விளங்குவார்கள் என உறுதி அளிக்கிறேன் என்று கூறினார்.
சிறப்பு மலை ரயில்கள் இயக்கம்
ஊட்டி,செப்.5- இரண்டாவது சீசன் தொடங்கியுள்ளதால் குன்னூர்- ஊட்டி, ஊட்டி-கேத்தி இடையே சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கி வருகிறது. மேட்டுபாளையம் முதல் ஊட்டி வரை இயக்கப்படும் நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயிலில் பயணிக்க ஏராளமான சுற்றுலா பயணிகளும் ஆர்வம் காட்டுகின்றனர்.
தற்போது இரண்டாவது சீசன் தொடங்கி உள்ள நிலையில் விநாயகர் சதுர்த்தி மற்றும் மிலாடி நபியை முன்னிட்டு வார இறுதி நாட்களில் சிறப்பு மலை ரயில் சேவையை தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் அறிவித்துள்ளது. இதன்படி குன்னூர்- ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில் சேவை 7,8 மற்றும் 14, 15 ஆகிய தேதிகளில் குன்னூர்- ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில் இயக்கப்பட உள்ளது. குன்னூரில் காலை 8.20 மணிக்கு புறப்பட்டு 9.40 மணிக்கு ஊட்டி வந்தடையும். ஊட்டியில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு 5.55 மணிக்கு குன்னூர் சென்றடையும். மேலும் ஊட்டி- கேத்தி- ஊட்டி இடையே 3 ரவுண்ட் ஜாய் ரைட் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இரு சேவைகளி லும் முதல் வகுப்பில் 80 இருக்கைகளும், இரண்டாம் வகுப்பில் 130 இருக்கைகளுடன் இயக்கப்படும். சிறப்பு மலைரயிலில் சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று ரயில்வே நிர்வாகம் தெரி வித்துள்ளது.
காற்றாலை மின் உற்பத்தி நிலைய கொள்கை வெளியீடு
சென்னை,செப்.5- தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுக்கான ஆயுள் நீட்டிப்புக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. தமி ழகத்தில் காற்றாலை மின் உற்பத்தியை 25 சதவீதம் அதிகரிக்கும் வகையில் புதிய கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. மின் கட்டமைப்பில் 50 சதவீதம் பசுமை மின் உற்பத்தி என்ற இலக்கை அடைய புதிய கொள்கை உதவும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி
சென்னை, செப்.5- கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி செப்டம்பர் 5 அன்று உருவானது.
இது வடக்கு-வடமேற்கு திசையில் அடுத்த 2 நாட்களுக்கு நகரக் கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணிக்கின்ற னர். இது வடக்கு ஆந்திரா பகுதியை நோக்கி நகர்ந்து செல்வதால் தமிழ கத்திற்கு பெரிய அளவில் மழைக்கு வாய்ப்பு இல்லை.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.