tamilnadu

img

அக்.1 முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி

சென்னை:
தமிழகத்தில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்கலாம்என்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.  இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: 

அக்டோபர் 1 ஆம் தேதியிலிருந்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 10, 11, 12 ஆம் வகுப்புமாணவ, மாணவிகள் சுய விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிகளுக்கு வரலாம்.  பெற்றோரின் எழுத்துமூல மான ஒப்புதலின்  பேரில் மாணவர்களில் 50 சதவீதத்தினர், ஒரே நேரத்தில்வந்து  தங்கள் பாடங்கள் பற்றியசந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டு அறியலாம். மாணவர்களுக் கிடையே ஒருவருக்கு ஒருவர் 6 அடி தொலைவு இடைவெளி அவசியம். போதிய காற்றோட்ட வசதி இருக்க வேண்டும். வானிலை சாதகமாக இருக்குமானால், திறந்தவெளியில் வகுப்புகளை நடத்தலாம்.  இவ்வகுப்புகளில் பாடம் நடத்தும் ஆசிரியர்களில் 50 சதவீதம் பேர் ஒரே நேரத்தில் பள்ளிகளுக்கு வரலாம். மாணவர்கள் ஆசிரியர்களிடமிருந்து வழிகாட்டுதல்களை பெற ஏதுவாக இந்த அனுமதி வழங்கப்படுகிறது.  நோய் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே இது பொருந்தும்.  

மாணவர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, முதல் குழு, திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களிலும்; இரண்டாவது குழு செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களிலும் பள்ளிகளுக்கு வரலாம். ஆசிரியர்களும் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆசிரியர் குழுவும் இரண்டு நாட்களுக்கு பள்ளிகளுக்கு வரும்.ஆசிரியர்களில் முதல் குழு மாதத்தின் முதல் வாரத்தில் திங்கள்,செவ்வாய் ஆகிய நாட்களிலும் அதைத் தொடர்ந்து இரண்டாவது குழு புதன், வியாழன் ஆகிய நாட்களிலும் அதன்பின்னர்  முதல் குழு வெள்ளி, சனி ஆகிய நாட்களிலும் பணிபுரிவார்கள்.  இரண்டாவது வாரத்தில், இரண்டாவது குழு திங்கள், செவ்வாய்க்கிழமைகளிலும், முதல் குழு புதன், வியாழன் கிழமைகளி லும்,  மீண்டும் இரண்டாவது குழு வெள்ளி, சனி ஆகிய நாட்களிலும்சுழற்சி முறையில் பணியாற்று வார்கள். போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தூய்மை பணிகள் உட்பட நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பள்ளிகளில் இதற்காக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

;