tamilnadu

img

சென்னை முக்கிய செய்திகள்

தங்கம் விலை மீண்டும் உயர்வு

சென்னை, ஜூன் 11- சென்னையில் செவ்வா யன்று  ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 53,160-க்கும் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,645-க்கும் விற்பனை யாகிறது.வெள்ளி விலை குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் 20 காசு கள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.95-க்கும் பார் வெள்ளி ரூ.95ஆயிரத் துக்கும் விற்பனை செய்யப் படுகிறது.

காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

சென்னை, ஜூன் 11- மெத்தனமாக செயல்பட்டதாகக் கூறி கொருக்குப் பேட்டை காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

கொருக்குப்பேட்டை (எச் 4) காவல் நிலைய எல்லைக் குட்பட்ட பகுதியில் 2 சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் தலைமையிலான இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உள்ளதாக முன்கூட்டியே அறிவுறுத் தப்பட்டிருந்த போதிலும், கொருக்குப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் ஆர்.யுவராஜ் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருந்த நிலையில், திங்க ளன்று (ஜூன் 10) மேற்படி சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ஒரு தரப்பைச் சேர்ந்த தினேஷ் என்பவரை மற்றொரு தரப்பினர் கத்தியால் தாக்கி கொலை செய்தனர்.

மெத்தனமாக செயல்பட்டு, மேற்படி நிகழ்வை தடுக்க தவறிய காரணத்திற்காக, கொருக்குப்பேட்டை காவல் ஆய்வாளர் செவ்வாயன்று (ஜூன் 11) தற்காலிக பணி யிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.