tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தங்கம் விலை சற்றுகுறைந்தது

சென்னை, மே 20- சென்னையில் செவ்வா யன்று (மே 20) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.45 குறைந்து, ரூ.8,710-க்கும்; சவரனுக்கு ரூ.360 குறைந்து,  ரூ.69,680-க்கும் விற்பனை யாகிறது. அதே போல, வெள்ளி  விலையில் மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் ரூ. 109-க்கும், ஒரு கிலோ ரூ. 1,09,000-க்கும் விற்பனையா கிறது.

பூக்கள் விலை சரிவு

சென்னை, மே 20- முகூர்த்த நாட்கள் இல்லாததால் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் சரிந்து காணப்பட்டது. குறிப்பாக, ஒரு கிலோ மல்லி ரூ.450 லிருந்து ரூ.300க்கும், ஐஸ் மல்லி ரூ.360லிருந்து ரூ.250 க்கும், முல்லை மற்றும் ஜாதி மல்லி ரூ.300லிருந்து ரூ.150 கும், கனகாம்பரம் ரூ.600 லிருந்து ரூ.200க்கும், அரளி பூ ரூ.200லிருந்து ரூ.150க் கும், சாமந்தி ரூ.140லிருந்து ரூ.80க்கும், சம்பங்கி ரூ.100 லிருந்து ரூ.60க்கும், பன்னீர் ரோஸ் ரூ.70லிருந்து ரூ.20க் கும், சாக்லேட் ரோஸ் ரூ.120 லிருந்து ரூ.80க்கும் விற்பனை செய்யப்பட்டு வரு கிறது. விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் தொடங்கும் போது மீண்டும் அனைத்து பூக்களின் விலை படிப்படியாக உயரும் என வியாபாரிகள் தெரிவித்த னர்.