tamilnadu

img

தங்கம் விலை ஒருசவரன் ரூ.36,976-க்கு விற்பனை

சென்னை:
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து, கடந்த மாதம் (ஜூன்) 24-ந்தேதி ஒரு  சவரன் ரூ.37 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உயர்வை சந்தித்தது. அதன் பின்னர் ஏற்ற, இறக்கத்துடன் தங்கம் விலை காணப்பட்டு வருகிறது. அந்தவகையில் வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.62-ம், சவரனுக்கு ரூ.496-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 622-க்கும், ஒரு சவரன்  ரூ.36 ஆயிரத்து 976-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி விலை குறைந் துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் 80 காசும், கிலோவுக்கு ரூ.1,800-ம் குறைந்து, ஒரு கிராம் 52 ரூபாய் 90 காசுக்கும், ஒரு கிலோ ரூ.52 ஆயிரத்து 900-க்கும் விற் பனை ஆனது.

;