சென்னை,ஜூன்26- தமிழ் மாநில காங்கி ரஸ் நிறுவனத் தலைவர் ஜி.கருப்பையா மூப்ப னாரின் மனைவியும் மத்திய முன்னாள் அமைச்சர் ஜி.கே.வாச னின் தாயாருமான கஸ்தூரி மூப்பனார் முதுமை காரணமாக கடந்த சில நாட்களாக உடல் நலக்குறை வால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் சென்னையில் புதனன்று காலமானார். அவரது உடலுக்கு தமிழக முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். கும்பகோணம் அருகே சுந்தரப்பெரு மாள்கோவிலில் கஸ்தூரி மூப்பனாரின் இறுதிச் சடங்குகள் வியாழனன்று (ஜூன் 27) மாலை நடக்கிறது.