ஊனங்கள் இருந்தபோதிலும் மிக நேர்த்தியான சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் ஐந்து சாதனையாளர்களை கவுரவிக்கும் வகையில் கவின்கேர் எபிலிட்டி விருதுகள் சென்னையில் வழங்கப்பட்டன. தொழில்முனைவோர் ஸ்ரீராம் சுப்பிரமணியா, கோல்ஃப் யூனியன் நிர்வாகி ஈஸ்வர் அச்சாந்தா, திரைப்பட இயக்குநர்கள் சாரதா நாராயணன், லட்சுமி ராமகிருஷ்ணன், கவின்கேர் நிர்வாக இயக்குநர் சி.கே ரங்கநாதன் எபிலிட்டி ஃபவுண்டேஷன் நிறுவனர் ஜெயஸ்ரீ ரவீந்திரன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.