tamilnadu

img

விநாயகர் சதுர்த்தி: அரசு தனது முடிவில் உறுதியாக இருக்க வேண்டும்... முதல்வருக்கு மக்கள் ஒற்றுமை மேடை வலியுறுத்தல்

சென்னை:
விநாயகர் சதுர்த்தி சிலைகள் அமைக்கும் விஷயத்தில் தமிழக அரசு தனது முடிவில் உறுதியாக இருக்கவேண்டும் என்று தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து மேடையின் சார்பில் ஒருங்கிணைப்பாளர்கள் பேரா.அருணன், க-உதயகுமார் விடுத்துள்ள அறிக்கை:

விநாயகர் சதுர்த்தியைப் பொது விழாவாக நடத்த அனுமதிதர வேண்டும் என்று தமிழக முதல்வரை பாஜக மாநிலத் தலைவர் சந்தித்து கேட்டுக் கொண்டதாகவும், அதிகாரிகளைக் கலந்து முடிவு தெரிவிப்பதாக முதல்வர் கூறியதாகவும் செய்திகள் வந்துள்ளன.  இது தமிழக மக்கள் ஒற்றுமைமேடைக்கு கவலையைத் தருகிறது.இந்தக் கொரோனா கொள்ளை நோய்க் காலத்தில் விநாயகர் சதுர்த்தியைப் பொது விழாவாகக் கொண்டாடக் கூடாது, பொது இடங்களில் சிலைகளை வைக்கக்கூடாது, ஊர்வலங்களை நடத்தக்கூடாது என்று தமிழக அரசு மிகச்சரியான முடிவை எடுத்திருந்தது. ஆனால் இந்து முன்னணி எனும் சங்பரிவார அமைப்பு அந்தத் தடையை மீறுவோம் என்று அடாவடித்தனமாக அறிவித்திருந்தது. இந்தப் பின்புலத்தில் இந்தச் சந்திப்பும், வேண்டுகோளும் நடந்திருப்பது அரசை தனது சரியான முடிவிலிருந்து பின் வாங்கச் செய்யும் பாஜகவின் அழுத்தமாகத் தெரிகிறது.ஏற்கெனவே நோய்த்தொற்று அதிகரித்திருக்கும் நிலையில் விநாயகர் சதுர்த்தியைப் பொது விழாவாகக் கொண்டாடுவது அதை மேலும் அதிகரிக்கச் செய்யும் ஆபத்தைக் கொண்டது. இந்துக்களுக்கானவை எனச் சொல்லும் அமைப்புகள் அவர்களின் சுகாதார பாதுகாப்பு பற்றிக் கவலைப்படாமல் இப்படி பிடிவாதம் பிடிப்பது உண்மையிலேயே அவற்றுக்கு இந்துக்கள் மீது அக்கறை உண்டா எனும் கேள்வியை எழுப்புகிறது. இந்த ஆண்டு பிறமத பண்டிகைகள் பொது விழாக்களாக நடத்தப்படவில்லை என்பது மட்டுல்லாது, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல் போன்ற இந்துக்களின் திருவிழாக்களும் நடைபெறவில்லை என்பதை மேடை சுட்டிக்காட்டுகிறது. அப்போதைவிட இப்போது நோயின் ஆட்டம் அதிகமாகியிருக்கும்போது விநாயகர் சதுர்த்தியைப் பொது விழாவாக நடத்த அனுமதிப்பது மக்களின் உயிரோடு விளையாடும் விபரீதமாகும்.
இந்தக் கொரோனா காலத்தில் உத்திரப்பிரதேசத்தில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டு விழாவை நடத்தியதில் அதனது டிரஸ்டு தலைவருக்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தோருக்கும் கொரோனா பீடித்த செய்தியைக் கண்டோம். 
அந்த அனுபவத்தை மனதில்கொண்டு இந்தக் கொடூரமான நோய்க்கு மேற்கொண்டு எவ்விதவாய்ப்பையும் தமிழகத்தில் தந்து விடக்கூடாது என்று மேடை வற்புறுத்துகிறது.

மேலும் விநாயகர் சதுர்த்தி வீட்டு விழாவாகவே நடத்தப்பட்டு வந்தது, வருகிறது. அவரவர் இல்லங்களில் விநாயகருக்கு கொழுக்கட்டை படைத்து வணங்கி, பின்னர் அருகிலுள்ள நீர் நிலைகளில் விக்ரகத்தை அவரவர் கரைத்து விடுவார். 1980க்குப் பிறகுதான் அதையொரு பொது விழாவாகவும், பெரும் ஊர்வலங்களாகவும் மாற்ற முயன்றது இந்து முன்னணி. ஆனாலும் அப்படிச் செய்வது அந்த அமைப்பு தானே தவிர பொதுவான பக்தர்கள் அல்ல. அந்த அமைப்பும், விநாயகர் மீதான பக்தியாக இதைச்செய்யவில்லை, தனது வகுப்புவாத யுக்தியாகச்செய்கிறது. 

அதன்மூலம்தமிழகத்தில்மதப்பதட்டத்தைஉருவாக்கியது.இந்தஆண்டும்அந்தஅடாதசெயலைச்செய்யவேஅதுஅனுமதிகேட்கிறது.இதன்மூலம்சட்டம்ஒழுங்கைகெடுக்கும்வேலையில்அதுஇறங்கக்கூடும்.எனவே பாஜக தலைவரின் நிர்ப்பந்தத்திற்கு  பணியக் கூடாதுஎன்றும், ஏற்கெனவேஅரசுஎடுத்துள்ள முடிவில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் அவர்களை மேடை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. இதனால் மெய்யான பக்தர்களுக்கு எந்தப் பிரச்னையும் வரப்போவதில்லை, அவர்கள் வழக்கம் போல குடும்பப் பண்டிகையாக விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவார்கள் என்பதை மேடை அரசுக்கு சுட்டிக் காட்டுகிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

;