tamilnadu

img

மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக காந்தி நினைவு தின உறுதியேற்பு...

சென்னை:
காந்தியடிகள் நினைவுதினமான ஜனவரி 30 அன்று   தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் காந்தி நினைவு தின உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து  மேடையின் ஒருங்கிணைப்பாளர்கள் பேரா. அருணன் மற்றும் க. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக ஒரு கோடிப் பேரைச் சந்திக் கும் மாபெரும் மக்கள் இயக்கம் குடியரசு தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. "மதநல்லிணக்கம் காக்க ஒன்றுபடுவோம்" எனும் துண்டறிக்கை ஒரு கோடி பிரதிகள் விநியோகிக்கப்படுகின்றன. இது காணொளி வடிவிலும் வெளியிடப் பட்டு சமூக ஊடகங்கள் வழியாக உலா வருகிறது. ஆர்.எஸ்.எஸ். பரிவாரத்தின் பொய்ப் பிரச்சாரத்திற்கு சரியான பதிலடியாகத் திகழும் இவற்றுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

ஜனவரி 30 மகாத்மா காந்தி சநாதன மதவெறியன் கோட்சேயால் படுகொலை செய்யப்பட்ட நாள். நமதுதேசப்பிதா மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டவர், குறிப்பாக இந்து-முஸ்லிம்- கிறிஸ்தவ ஒற்றுமைக்காக உழைத்தவர். இந்தியாவின் வாழ் விற்கும் வளத்திற்கும் மக்கள் ஒற்றுமையே அஸ்திவாரமாகும். காந்தியார் அஹிம்சாமூர்த்தி. ஆனால் நாடெங்கும் கோட்சேயின் வாரிசுகள், பலாத்காரவாதிகள் அமைதிவாழ்வை நாசமாக்கி வருகிறார்கள்.எனவே, மகாத்மாவின் நினைவு நாளில் மதநல்லிணக்கத்திற்கான துண்டறிக்கை விநியோகத்தோடு “மக்கள் ஒற்றுமை காக்கிறோம், வன்முறையை வேரறுக்கிறோம்” எனும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வும் மாநிலம் முழுக்க நடக்கிறது. மேடை சார்பாக நடக்கும் இந்த நிகழ்வில் அதன் மாநில செயல்பாட்டுக்குழு உறுப்பினர்கள் முனைவர் வசந்திதேவி, பீட்டர்அல்போன்ஸ், கோபண்ணா, பேரா. ஜவாஹிருல்லா, கல்வியாளர் தாவூத் மியாகான், வன்னிஅரசு, அபுபக்கர் எம்எல்ஏ, தமிழன் பிரசன்னா, அருள்மொழி, தைமியா, சிக்கந்தர் உள்ளிட்ட பலரும், ஒருங்கிணைப்பாளர்கள் பேரா. அருணன், க. உதயகுமார் ஆகியோரும் ஆங்காங்கே பங்கேற்கிறார்கள்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

;