சிஐடியு 16வது அகில இந்திய மாநாடு 2020 ஜன. 23-27 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது.இதனையொட்டி சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தொழிலாளர் சங்கம் சார்பில் புதனன்று (டிச.18) நிதியளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் க.பீம்ராவ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசனிடம், சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.பழனி 2 லட்சம் ரூபாயை வழங்கினார். சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், சங்கத்தின் பொருளாளர் ஞானபிரகாஷ், துணைத்தலைவர் ச.சத்யநாதன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.