tamilnadu

img

வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்றித்தருக.. அங்கன்வாடி ஊழியர்-உதவியாளர்கள் சங்கத்தினர் சமூகநலத்துறை அமைச்சரிடம் மனு அளிப்பு.....

சென்னை:
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஜூன் 25 வெள்ளிக்கிழமையன்று சமூகநலத்துறை அமைச்சர் பி.கீதாஜீவனிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது. 

சங்கத்தின் மாநிலப்பொதுச்செய லாளர்  டி.டெய்சி மற்றும் நிர்வாகிகள், சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் ஆகியோர் அமைச்சரிடம் மனுவை வழங்கினர்.சமூகநலத்துறை அமைச்சரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்ப தாவது: 

பெண்கள் கருவுற்றதிலிருந்து குழந்தை பிறந்து 6 வயது வரை குழந்தைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதிசெய்யும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் 35 வருடம் பணியாற்றி வீட்டிற்கு செல்லும் போது எந்தவித சமூக பாதுகாப்பும் இல்லாமல், அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகவே உள்ளது. இதனால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஏற்கனவே பல நேரங்களில் அரசிடம் கோரிக்கைகள்  வைத்துள்ளோம். முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆட்சியில் தான் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு  பென்சன் கொடுக்கப் பட்டது. அவர் எங்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்தார். கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்  நடத்தினோம்.  2021 மார்ச் மாதம் தமிழகம் முழுவதும் அனைத்து அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் இணைந்து முறையான போராட்ட அறிவிப்பு நடத்தி அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் 110 விதியின் கீழ் அறிவித்ததைக் கூட செயல்படுத்த முன்வராத அரசு, பல்வேறு அடக்குமுறையை ஏவிவிட்டு போராட்டத்தை  கைவிட வலியுறுத்தியது. இருப்பினும் மார்ச் மாதத்தில்  அனைத்துமாவட்டங்களின் தலைநகரங்களிலும்  காத்திருப்புப் போராட்டம் வெற்றிகரமாகநடைபெற்றது.

எங்களை பேச்சு வார்த்தைக்குக் கூட அழைக்கவில்லை. அதனால் போராட்டம் தீவிரமடைந்தது. சில  ஊழியர்களின் உடல்நிலை மோசமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அப்போதும் அரசு கண்டுகொள்ளவில்லை. 
போராட்டம் தீவிரமாக  நடைபெற்று கொண்டிருந்த போது திமுக ஆட்சிக்கு வந்ததும்  அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்த போராட்டம் அன்று கைவிடப்பட்டது. மேலும் தி.மு.க தேர்தல் அறிவிக்கையில், தமிழகத்தில் பணியாற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும்உதவியாளர்கள் அரசுப்பணியாளர் களாக  பணியமர்த்தி காலமுறை ஊதியம்  வழங்கப்படும் எனவும் குறைந்தபட்ச ஓய்வூதியம் பணிக்கொடையும் வழங்கப்படும் என வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு இருள் சூழ்ந்த எங்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்தது போல் இருந்தது.சமூகநலத்துறை அமைச்சர், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையை பரிசீலித்து,முதல்வர்  ஸ்டாலினுக்குபரிந்துரை செய்து அவற்றை நிறை வேற்றித் தரும்படி  கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;