“இந்தியா முழுவதும் வக்பு வாரியத்திற்கு 8.7 லட்சம் எண்ணிக்கையிலான சொத்துகளில் 9.4 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதனுடைய மதிப்பு ரூபாய் 1.2 லட்சம் கோடி என்று கூறப்படுகிறது. ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிற வக்பு வாரியத்தின் இந்த சொத்துகளை முடக்குகிற பாஜக அரசின் முயற்சி அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதாகும்” என்று காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளார்.