சென்னை,ஜூலை 31- தாய்ப்பால் கொடுக்க இயலாத தாய்மார்கள் மற்றும் குறை பிரசவ குழந்தை களுக்காக வேளச்சேரி பிரஷாந்த் மருத்துவ மனையில் இலவச தாய்ப்பால் வங்கி துவங்கப்பட்டுள்ளது.
இந்த பால் வங்கியை பிரசாந்த் மருத்துவ மனைகளின் குழந்தை மருத்துவ துறை தலைவர் டாக்டர் டி. விஜயகுமார், பிறந்த குழந்தை தீவிர சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் வி. பிரகாஷ், குழந்தை மருத்துவ ஆலோசகர் டாக்டர் கீதா ஆகியோர் முன்னிலையில் சவீதா மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் ஜெ. குமுதா, குழந்தைகள் நல நிறுவனம் சென்னை மருத்துவக் கல்லூரி இயக்குனர் டாக்டர் ரெமா சந்திரமோகன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பிரசாந்த் குழும மருத்துவமனைகளின் தலைவர் டாக்டர் கீதா ஹரிப்ரியா பேசுகையில், குறைப்பிரசவ குழந்தையும் வாழ்க்கையில் சிறந்த தொடக்கத்தைப் பெறுவதை உறுதி செய்வதே எங்கள் நோக்கமாகும். பிரசாந்த் மனித பால் வங்கி, பாலூட்டும் தாய்மார்களிட மிருந்து நன்கொடைகளை எளிதாக்குவ தோடு, மேலும் பிறந்த குழந்தைகள் பரா மரிப்பில் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சமூகத்தை உருவாக்கு வதிலும் முக்கிய பங்கு வகிக்கும் என்றார். மேலும் இங்கு சேகரிக்கப்படும் தாய்ப்பாலை நகரத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனை கள் மற்றும் பிறந்த குழந்தை பராமரிப்பு மையங்களுக்கு நன்கொடையாக வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சென்னை மருத்துவக் கல்லூரி இயக்கு நர் டாக்டர் ரெமா சந்திரமோகன் பேசுகையில், தாய்ப்பால் குறிப்பிடத்தக்க நன்மைகளைக் கொண்டுள்ளது மற்றும் எந்தவொரு குழந்தைக்கும் உடல் ஆரோக்கியத்திற்கு தாய்ப்பால் அடித்தளமாக உள்ளது என்றார்.