tamilnadu

img

இலவச கண் அறுவைசிகிச்சை

சென்னை, ஜூன் 6- சென்னையில் மிகவும் பிரபலமான அகர்வால்ஸ் கண்மருத்துவமனை, நகரில் அதிவேகமாக வளர்ச்சியடைந்து வரும் பகுதிகளில் ஒன்றான அம்பத்தூரில் மிக நவீன கண் சிகிச்சை மருத்துவமனையை தொடங்கியுள்ளது.நடிகர் சந்தானம் இந்த மருத்துவமனையை திறந்துவைத்தார். மருத்துவமனை குழுமத்தின் தலைமை செயலாக்க அதிகாரி டாக்டர். அதில் அகர்வால், டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனை, அம்பத்தூரின் மருத்துவ சேவைகள் பிரிவின் தலைவர் டாக்டர். கௌசிக் ஆகியோர் இந்தவிழாவில் கலந்துகொண்டனர். நடிகர் சந்தானம் கலந்துகொண்டு கண்தானம் படிவத்தில் கையெழுத்திட்டார். கண் மருத்துவமனை தொடக்க விழாவை குறிக்கும் வகையில், ஏழ்மையான சமூக – பொருளாதார பின்புலத்தைச் சேர்ந்த வசதியற்ற 100 நபர்களுக்கு கட்டணமே இல்லாமல் முற்றிலும் இலவசமாக கண் அறுவை சிகிச்சைகள் செய்யப்படுமென்று அகர்வால் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைமை செயலாக்க அதிகாரி டாக்டர். அதில் அகர்வால் கூறினார்.

;