tamilnadu

img

விவசாயிகளுக்கான உதவி திட்டத்தில் மோசடி... சிபிசிஐடி விசாரணை கோரி செப்.1-ல் ஆர்ப்பாட்டம்

சென்னை:
விவசாயிகளுக்கான உதவி திட்டத்தில் நடந்துள்ள மோசடி குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி செப்டம்பர் 1ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
மத்திய அரசின் விவசாயிகளுக்கான பிரதமர் உதவி திட்டத்தில் பயன்பெற தகுதியற்ற பல்லாயிரக்கணக்கானோர் சேர்க்கப்பட்டு தமிழ்நாட்டில் மாபெரும் மோசடி நடைபெற்றுள்ளது. விவசாயிகளுக்கென்று உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தில் விவசாயத்திற்கு சம்பந்தமில்லாத, நிலமற்ற ஏராளமானோர் பலனடைந்துள்ளனர். வேளாண்மைதுறை மற்றும் வருவாய்த்துறையைச் சார்ந்தவர்கள் புரோக்கர்கள் மூலமாக, தனியார் இணைய மையங்கள மூலம் இந்த மோசடியை செய்துள்ளனர்.

தகுதிபடைத்த விவசாயிகள் பலர் இத்திட்டத்தில் சேர முடியாமல் தவித்து வரும் நிலையில் லஞ்சம் பெற்றுக் கொண்டு போலியான நபர்கள் இத்திட்டத்தால் பலனடைந்துள்ளது விவசாயிகள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில், “இந்த மோசடி அம்பலமான பிறகும் நேர்மையாக விசாரணை நடத்தி குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்ற முறையில் தமிழக அரசின் அணுகுமுறை இல்லாதது வன்மையான கண்டனத்துக்குரியது” என்று குறிப்பிட்டுள்ளார்.

பெயரளவுக்கு விசாரணை என்ற கண்ணா மூச்சி நாடகத்தை நடத்தி குற்றவாளிகளை பாதுகாப்பதற்கு அரசு முயற்சிப்பதாகவே தெரிகிறது. பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல், உயரதிகள் உட்பட பல நூறு பேர் சம்பந்தப்பட்ட இந்த முறைகேடு குறித்து மோசடியில் ஈடுபட்ட துறை சார்ந்தவர்களை அந்த துறை அதிகாரிகளே விசாரிப்பார்கள் என்பது முழுபூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாகும் என்பதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.இந்த மோசடியில் சம்பந் தப்பட்ட குற்றவாளிகள் எவரும் 
தப்பிக்கக் கூடாது என்பதற்காகத்தான் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தவிட வேண்டுமென்று கோரியது. ஆனால், அரசு வேளாண்மைதுறை மற்றும் வருவாய்த்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள் ளது. பல மாவட்டங்களிலும் இந்த மோசடி நடைபெற்றுள்ளதால் பல துறை சார்ந்தவர்களும், இடைத் தரகர்களும், அரசியல் செல்வாக்கு மிக்கவர்களும் இதில், சம்பந்தபட்டுள்ளதாலும் முழுக்க, முழுக்க கிரிமினல் குற்ற நடவடிக்கையாக இருப்பதாலும் சிபிசிஐடி விசாரணைக்கு இந்த வழக்கை ஒப்படைக்க வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மீண்டும் வலியுறுத்துகிறது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி செப்டம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட தீர்மானிக்கப் பட்டுள்ளது.விவசாயிகளுக்கான திட்டத் தில் நடைபெற்றுள்ள இந்த மாபெரும் மோசடி, ஊழலுக்கெதிராக நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் பெருமளவு கலந்து கொண்டு அரசுக்கு கண்டனத்தை தெரிவிக்க முன்வரவேண்டும் என்றும் சண் முகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

;