tamilnadu

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: 3 பேர் கைது

வேலூர், ஜூன் 7- தமிழக அரசில்ல் உதவி மக்கள் தொடர்பு  அலுவலர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.15.50 லட்சம் மோசடி செய்த அரசுப்  பள்ளி ஆசிரியர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். குடியாத்தம் வட்டம் பார்த்தபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் எழிலரசன். இவர் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்கிறார். அவருக்கு தமிழக அர சின் செய்தி மக்கள் தொடர்புத் துறையில்  உதவி மக்கள் தொடர்பு அலுவலர் வேலை  வாங்கித் தருவதாக அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியரான, ஆம்பூரை அடுத்த சோலூர் கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் (46) என்பவர் தெரிவித்துள்ளார். இதை அவர் எழிலரசனின் சகோதரர் கலை யரசனிடம் கூறி, அதன்படி 3 தவணைகளாக 15.50 லட்ச ரூபாயை கமலக்கண்ணனிடம் கடந்த 2017ஆம் ஆண்டு கொடுத்தனர். அவ ரும் பணத்தை பெற்றுக் கொண்டு நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதம் மற்றும் பணி நியமன ஆணையை பெற்றுக் கொள்வதற்கான அழைப்புக் கடிதத்தை செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வழங்கியது போல் போலியாக கடிதம் தயாரித்து வழங்கியதாகக் கூறப்படுகிறது. அதுகுறித்த சந்தேகத்தின்பேரில், எழி லரசன் சென்னை தலைமைச் செயல கத்திற்கு சென்று விசாரித்தபோது அது போலி யானது என்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து அவர் கமலக்கண்ணனை சந்தித்து  பணத்தை திருப்பித் தரும்படி கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தைத் திருப்பித் தர வில்லை. பின்னர் பலமுறை சென்று பணம்  கேட்டபோது 3 காசோலைகளை கமலக் கண்ணன் கொடுத்தார். அதில் இரு காசோலை களை பணம் இல்லாமல்  திரும்பி வந்தன. பின்னர் பணத்தை திருப்பித் தரும்படி  கேட்டபோது, எழிலரசனை தகாத வார்த்தைக ளால் திட்டியதோடு, கமலக்கண்ணன், அவ ரது மகன் ராகேஷ் கண்ணா (22), உறவினர்  சுபாஷ் சந்திரபோஸ் (27) ஆகிய மூவரும் எழி லரசனை தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகா ரின் பேரில் ஆம்பூர் கிராமிய காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து, கமலக்கண் ணன் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.

;