வட சென்னையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களுக்கு அடிக்கல்
சென்னை, ஏப். 24- திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு 76க்கு உட்பட்ட செல்லப்பா தெருவில் ரூ.1.58 கோடி மதிப்பில் 455 சதுர மீட்டர் பரப்பளவில் புதிதாக கட்டப்படவுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் மற்றும் வார்டு 78க்கு உட்பட்ட வி.வி. கோயில் தெருவில் ரூ.1.58 கோடி மதிப்பில் 455 சதுர மீட்டர் பரப்பளவில் புதிதாக கட்டப்படவுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் அமைப்பதற்கான பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த சுகாதார மையங்களில் வரவேற்பு பகுதி, மருந்தகம், ஊசி போடும் அறை, உள் நோயாளி பிரிவு அறை, நலவாழ்வு மையம், ஆய்வக அறை, மருந்து இருப்பு அறை, ஸ்கேன் அறை, மருத்துவ ஆலோசனைகளுக்கு 2 அறைகளுடன் 455 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து, அமைச்சர், வார்டு 76க்குட்பட்ட செல்லப்பா தெருவில் மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு திட்ட நிதியில் ரூ.17 லட்சம் மதிப்பில் 800 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டடம் மற்றும் ரூ.15 லட்சம் மதிப்பில் 800 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள குழந்தைகள் மையத்தையும் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில், மேயர் ஆர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மத்திய வட்டார துணை ஆணையர் கே.ஜே.பிரவீன் குமார், மண்டலக் குழு தலைவர் சரிதா மகேஷ்குமார், நியமனக் குழு உறுப்பினர் சொ.வேலு, மாமன்ற உறுப்பினர்கள் எஸ்.தமிழ்செல்வி, பரிதி இளம்சுருதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.