tamilnadu

img

பாதுகாப்புத்துறையில் அன்னிய நேரடி முதலீடு நாட்டின் சுயசார்பிற்கு எதிரானது

சென்னை:
“ஆத்ம நிர்பார் பாரத்” எனும் பெயரில் இந்தியாவில் உற்பத்தி செய்யும் திட்டத்தை ஊக்குவிப்போம் எனும் பெயரில் மத்திய அரசு அதற்கு நேர் மாறாக அனைத்து துறைகளிலும் அன்னிய நாட்டு மூலதனத்தை அனுமதிப்பது என்று முடிவெடுத்துள்ளது கண்டிக்கத்தக் கது என்று அகில இந்திய பாதுகாப்புத்துறை தொழிலாளர்கள் சம்மேளனம் பொதுச்செயலாளர்  ஸ்ரீகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர்விடுத்துள்ள அறிக்கையில்  குறிப்பாக, நாட் டின் மிகவும் கேந்திரமான பாதுகாப்பு தளவாட உற்பத்தித் துறையில் அன்னிய நேரடி முதலீடு 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்ற கடந்த மே16-ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்திய நாடு பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் சுயசார்பை எட்டும் நோக்கோடு உருவாக்கப்பட்ட 41 பாதுகாப்புத் தொழிற்சாலைகள், 52 பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனங்கள், 9 பாதுகாப்பு பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றை ஊக்குவித்து பலப்படுத்தி பாதுகாப்பு தளவாட தேவைகளில் அன்னிய நாடுகளை நம்பியிருக்காமல் நம் நாட்டிலேயே உற்பத்தி செய்யும் திட்டங்களை தீட்டுவதற்கு பதிலாக மத்திய அரசு “இந்தியாவில் தயாரிப் போம்” எனும் பெயரில் பாதுகாப்பு தளவாட உற்பத்தித் தொழிலில் அன்னிய நேரடி மூலதனத்தை 74 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதனை மத்திய அரசு இன்னும் அமல்படுத்தவில்லை என்றும், உடனடியாக மத்திய அமைச்சரவை இதற்கான முடிவை எடுக்க வேண்டுமென தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுக் குழு (டிபிஐஐடி) முடிவு செய்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

பாதுகாப்புத்துறையில் அன்னிய மூலதனத்தை அனுமதிப்பது நமது நாட்டின் சுயசார்பை கேலிக்குரியதாக மாற்றிவிடும். மேலும் பாதுகாப்பு தளவாட உற்பத்தி அன்னிய நாட்டு பெரு முதலாளிகளின் கட்டுப் பாட்டிற்குள் வருவது நமது நாட்டின் பாதுகாப்பிற்கு மிகவும் ஆபத்தானதாகும். இதுவரையில் பாதுகாப்புத்துறையில் பெரிய அளவில் மூலதனம் செலுத்த அன்னிய நாட்டு ராணுவ தளவாட உற்பத்தியாளர்கள் தயாராக இல்லை என்பது தெரியவந்துள் ளது. குறிப்பாக, கடந்த 20 ஆண்டு
களில் சுமார் ரூ.60 கோடி அளவிற்குத்தான் அன்னிய நேரடி முதலீடு வந்துள்ளதாக டிபிஐஐடி நிறுவனம் அறிவித்துள்ளதாகவும் பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் மத்திய அரசு அன்னிய நாட்டு மூலதனத்தை ஊக்குவிப்பதற்காக அதற்குண்டான நிபந்தனைகளை தளர்த்த எடுத்துள்ள முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். உள்நாட்டிலேயே அனைத்து விதமான பாதுகாப்பு தளவாடங்களும் உற்பத்தி செய்யக்கூடிய திறமையும், தகுதியும் நமது பாதுகாப்புத் துறை தொழிற்சாலைகளுக்கும், ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் முழுமையாக உள்ளபோது அவற்றை உதாசீனப் படுத்தி பாதுகாப்புத்துறை தளவாட உற்பத்தியை கண்மூடித் தனமாக தனியாரிடம் ஒப்படைப்பதும், அதற்காக 74 சதவீத அன்னியநாட்டு மூலதனத்தை நிபந்தனைகள் எதுவும் இல்லாமல் அனுமதிப்பதும், நமது உள்நாட்டு தொழில்களை அழிப்பதற்கே உதவும். எனவே, மத்திய அரசு எடுத்துள்ள பாதுகாப்பு தளவாட உற்பத்தி சம்மந்தமான தனியார் மயக் கொள்கை, பாதுகாப்புத் துறை தொழிற்சாலைகளை பொதுத்துறை நிறுவனமாக மாற்றி தனியாரிடம் ஒப்படைப்பது, அன்னிய நாட்டு மூலதனத்தை நிபந்தனையில்லாமல் அனுமதிப்பது போன்ற கொள் கைகளை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்துகிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

;