tamilnadu

img

காவல் அதிகாரி ஷாபியா ஷைபி படுகொலைக்கு நீதி கேட்டு செப்.16 மாநிலம் முழுவதும் போராட்டம்.... அனைத்துப்பகுதி மக்களும் பங்கேற்க வேண்டுகோள்....

சென்னை:
ஒன்றிய பாஜக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தில்லி காவல்துறையில் அதிகாரியான ஷாபியா ஷைபி என்ற இளம்பெண் அதிகாரி பாலியல் பலாத்காரம் செய்து,கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் . இச்சம்பவத்தைக் கண்டித்தும் காவல்துறை அதிகாரி ஷாபியா ஷைபி படுகொலைக்கு நீதி கேட்டும் தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் 16 ஆம் தேதியன்று போராட்டம் நடைபெறுகிறது. 

இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநில பொதுச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக விடுக்கும் அறிக்கை வருமாறு:
தேசத்தின் தலைநகரான தில்லியில் காவல்துறையில் பணியாற்றிய ஷாபியா அவர்கள் கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி பாலியல்பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடுஞ்செயலை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வன்மையாகக் கண்டிப்பதோடு இதற்கு எதிராக தமிழகம்முழுவதும் செப்டம்பர் 16 வியாழக்கிழமை யன்று நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்துப் பகுதி மக்களும் பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். 

தில்லி காவல் துறையில் பணியில் சேர்ந்து சில மாதங்களே ஆன நிலையில் ஷாபியா அவர்கள் கோரமான வகையில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொடுமையான முறையில்அவருடைய மார்பகங்களும், பிறப்புறுப்பு களும் சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப் பட்டிருக்கிறார். தில்லி காவல்துறை என்பது ஒன்றிய அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கிற துறையாகும். தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கிற ஒரு அலுவலர் மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிற நிலையில் அவருக்கான நீதி கிடைப்பதற்கு ஒன்றிய ஆட்சியாளர்கள் குறைந்தபட்ச அக்கறை கூட காட்டாத நிலை இருக்கிறது. 

அவசர அவசரமாக உடற்கூராய்வு செய்யப்பட்டு, பெற்றோரிடம்அப்பெண்ணின்  உடல்  வழங்கப்பட்டிருக்கிறது. அடக்கம் செய்வதற்கு முன்னால் அவரை சுத்தம் செய்கிற போதுதான் அவர் மீது இது போன்ற கொடூரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டி ருக்கிற உண்மை தெரிந்துள்ளது. இக்கொடு மைக்கு எதிராக புகார் அளிக்கச் சென்ற அவர் தந்தையிடம் தில்லி காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், முதல் குற்றப்பத்திரிக்கை தயார் செய்யப்பட்டிரு ப்பதாகவும், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என மிக சாதாரணமாக நடந்து கொண்டது மிகப் பெரிய அளவில் சந்தேகங்களையும், அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.

பெண்கள் மீது ஒன்றிய அரசின் அக்கறையற்றப் போக்குசிறுபான்மை இனத்தைச் சேர்ந்த இளம்பெண் மீது இவ்வளவு பெரிய கொடுமை நிகழ்த்தப்பட்ட பின்பும், கேள்விகேட் பாரற்ற நிலையில் ஒன்றிய பாஜக ஆட்சியாளர்களால் நடத்தப்பட்டிருப்பது மிகப்பெரும் கண்டனத்திற்குரியது. இதுவரை இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்டவர்கள் யாரும் கைது செய்யப்படாததும் பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசின் பெண்கள் மீதான, சிறுபான்மை மக்கள் மீதான இது போன்ற அக்கறையற்றப் போக்கை வன்மை யாகக் கண்டிக்கிறோம்.இந்த தீய செயலில் ஈடுபட்டோர் அனைவரையும் கைது செய்ய வேண்டும். பெண்கள், சிறுபான்மையினர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை
இவ்வழக்கை நீதிமன்ற கண்காணிப்புடன் சுயேட்சையான, நேர்மையான விசாரணை நடத்த வேண்டும். குறிப்பிட்ட  காலவரை யறைக்குள் அனைத்து குற்றவாளிகளுக்கும் தண்டனையை உறுதி செய்கிற வகையில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.நேரடியாக, மறைமுகமாக இக்கொடுஞ்செயலுக்கு காரணமானவர்கள் அனை வரையும் உடனே கைது செய்ய வேண்டும்.அனைத்து பணியிடங்களிலும் பாலியல்  புகார் கமிட்டிகளையும் அமைத்திடவும் ,  பெண் பணியாளர்களுக்கான பாதுகாப்பை  உறுதிப்ப்படுத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்க வேண்டும் என்றும்  ஷாபியா ஷைபி மீதான கொடூரத்திற்கு நீதி கேட்டும் தமிழகம் முழுவதும் செப்டம்பர் 16  வியாழக்கிழமை அன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவும் இணைந்து நடத்துகிற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்துப் பகுதி மக்களும் ஆதரவு தர வேண்டும். ஜனநாயக எண்ணம் கொண்டோர் இவ்வியக்கத்தில் கண்டனம் முழக்க அணிதிரள வேண்டும் என்று அறைகூவி அழைக்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;