tamilnadu

நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை... அமைச்சர் தகவல்...

சென்னை:
நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் விபரீத முடிவு எடுப்பதை தடுக்க மாணவர் களுக்கு உளவியல் ரீதியாக கவுன்சிலிங் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, 1 லட்சம் மாணவர்களுக்கு போனில் மனநல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

நீட் தேர்வுக்கு பயர்ந்து மன உளைச்சலாலும் மாணவர்கள் தற்கொலை செய்கிறார்கள். மாணவர்கள் இந்த மாதிரி விபரீதமுடிவுகளை எடுக்க வேண்டாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இந்த நிலையில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் மன நல கவுன்சிலிங் வழங்கஅரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாகமக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் விபரீத முடிவு எடுப்பதை தடுக்கவும் அவர் களுக்கு உளவியல் ரீதியாக கவுன்சிலிங் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. நீட் தேர்வு எழுதிய 1, 11,000 மாணவர்களையும் போனில் தொடர்பு கொண்டு கவுன்சிலிங் அளிக்கப்படும். இதற்காக மாவட்ட வாரியாக நீட் தேர்வு எழுதியவர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டுப்பாட்டு அறையில் மனநல ஆலோசகர்கள் அமர்ந்து இருப்பார்கள். அவர்கள் மாணவர்களை செல்போனில் தொடர்பு கொண்டுபேசி மனநல ஆலோசனை வழங்குவார்கள். வியாழக்கிழமையன்று(செப்.16) சென்னையில் தொடங்கும். அதை தொடர்ந்து 38 மாவட்டங்களிலும் நடைபெறும். ஒரு வாரத்துக்குள் அனைத்து மாணவர்களுக்கும் கவுன்சிலிங் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் சிவசங்கர் அறிவுரை
இதனிடையே, அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மாணவிகனிமொழி தற்கொலை செய்து உள்ளார்.அவரது உடலுக்கு (செப் 14) அஞ்சலி செலுத்திய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்சிவசங்கர், நீட் தேர்வுக்கு எதிரான மசோதா சட்டப்பேரவையில், தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இம்மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்குபெற நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற செயல்களை மாணவ, மாணவிகள் ஈடுபடாமல் மனதை திடப்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இதற்காக மனதளவில் மாணவ, மாணவிகள் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என கூறினார்.

;