சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த தோழர் செபாஸ்டியன் மகள் லலிதா- எட்வின் திருமணம் சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இந்தவிழாவில் சிபிஎம் மூத்த தலைவர் வே.மீனாட்சிசுந்தரம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க.பீமாராவ், தீக்கதிர் சென்னைப்பதிப்பு பொதுமேலாளர் சி.கல்யாண சுந்தரம், ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர் முருகேஷ், ஊரப்பாக்கம் கிளைச் செயலாளர் மணிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது சிபிஎம் மத்திய சென்னை மாவட்ட வளர்ச்சி நிதியாக ரூ.5ஆயிரமும்.தீக்கதிர் வளர்ச்சி நிதியாக ரூ.5ஆயிரமும் மணமக்கள் மற்றும் மூத்த மகள் பாரதி ஆகியோர் வழங்கினர்.