வேலூர், ஏப்.30-வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை அடுத்த ஜம்மு குளம் கிராமத்தில் பட்டாசு தயாரிக்கும் குடோன் உள்ளது. இதில், பட்டாசு தயாரிக்கும் போது திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே பலியானான்.மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர்.அவர்களை உடனே வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.இச்சம்பவம் குறித்து வாலாஜா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.