சென்னை,செப். 26- துர்கா பூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வரவிருப்பதாலும் ஆலைகளிலும் தனியார் நிறுவனங்களிலும் போனஸ் வழங்கப்படவுள்ளதாலும் பல நிறுவனங்கள் பண்டிகை கால விற்பனையை தொடங்கி யுள்ளன. ஐரோப்பாவின் முன்னணி பிராண்டான தாம்சன் டிவி மிகவும் மலிவு விலை தொலைக்காட்சியை ரூ 6999 க்கு பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே சேல் வழியாக விற்பனை செய்ய உள்ளது தாம்சன்; 1.5 லட்சம் யூனிட்டுகளை விற்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக எஸ்.பி.பி.எல்-இன் தலைமை நிர்வாக அதிகாரி அவ்னீத் சிங் மர்வா கூறினார். சனிக்கிழமை நள்ளிரவு 12மணியிலிருந்து பிளிப்கார்ட் வளைதளத்தில் பிக் பில்லியன் சேல் தொடங்கி அனைத்து 5 நாட்களும் இந்த டிவி கிடைக்கும். 24 அங்குல எச்டி எல்இடி தொலைக்காட்சியின் விலை ரூ 5999 இல் தொடங்கு கிறது. தாம்சன் டிவியின் சமீபத்திய மாடல் அதன் அதி காரப்பூர்வ ஆண்ட்ராய்டு டிவி 4 கே வரம்பில் 43 அங்குலத்திற்கு 26,999 ரூபாய்க்கும், 65 அங்குலத்திற்கு 55,999 ரூபாய்க்கும் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.டெபிட். கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கும்போது தள்ளுபடிகளும் கிடைக்கும்.