tamilnadu

img

வேகமாக பரவும் டெங்கு: சென்னையில் இரு சிறுவர்கள் பலி

சென்னை, அக். 20 - சென்னை கொளத்தூர் பகுதி யைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பத்மா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் அரவிந்தன் காய்ச்சல் ஏற்பட்டதால் எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்தனர். பின்னர் காய்ச்சல் தீவிர மடைந்ததால் டெங்கு பிரிவில்  சிறுவன் சிகிச்சை பெற்று வந்தான். இந்நிலையில் சனிக்கிழமை யன்று(அக்.19) பரிதாபமாக அர விந்தன் உயிரிழந்தான். சிறுவனின் இறப்புச் சான்றிதழில் மர்மக் காய்ச்சலால் உயிரிழந்து உள்ளார் என எழுதப்பட்டுள்ளதாக கூறப்படு கிறது. இதனால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், அரவிந்தனின் சகோதரன் அருணாசலமும்  எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல் பெரியமேடு ஸ்டிங்கர்ஸ் சாலையில் வசித்து வருபவர் ஆனந்தன். இவரது மகள் அக்சிரா 7). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வந்தாள். காய்ச்சல் ஏற்பட்டதால்  அக்சிராவை எழும்பூர் குழந்தைகள் நல  மருத்துவமனை யில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி அக்சிரா பரிதாப மாக இறந்தாள். அவளுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர்.  சென்னையில் தற்போது  மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மேலும் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க முடியாமல் தமிழக அரசு திணரி வருகிறது. ஆனால் இதை ஒப்புக்கொள்ளாமல்  சுகாதாரத்துறை மூடி மறைக்கிறது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாதவரம் - செங்குன்றம் பகுதிச் செயலாளர்  கமலநாதன் கூறியதாவது:- வடசென்னை பகுதி முழுவதும் சுகாதார சீர்கேட்டில் சிக்கித் தவிக்கிறது. குண்டும் குழியுமான சாலைகளை முறையாக பரா மரிக்கப்படாததாலும், கழிவுநீர் இணைப்பு தூர்ந்துபேன தாலும்  தற்போது பெய்து வரும் மழையில் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கின்றன.  இதுகுறித்து பலமுறை சென்னை மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் கொடுத்தும் எவ்வித நட வடிக்கையும் எடுக்கவில்லை.  மாநக ராட்சியின் இந்த அலட்சியத்தால் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அரவிந்தன் குடும்பத்திற்கு உரிய நிவாரணமும், அவரது சகோ தரர் அருணாசலத்திற்கு முறையான சிகிச்சையும் வழங்க வேண்டும்.மாநகராட்சியின் அலட்சியப் போக்கைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாயன்று (அக்.22)  சுகாதாரத் துறை அலுவலகத்தை முற்றுகை யிட உள்ளோம்.  இவ்வாறு அவர் கூறினார்.