சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் வழங்கியவர்களுக்கு கூடுதல் இழப்பீடு கோரிக்கையை ஏற்க அரசு மறுத்ததால் விவசாயிகள் வெளிநடப்பு
திருவள்ளூர், ஜூன் 27- சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் வழங்கிய விவசாயி களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் எழுப்பிய கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் ஏற்காத தால் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் இருந்து வெளி நடப்பு செய்தனர். சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலைக்கு 2009-10 ஆம் ஆண்டு 1901 விவசாயிகளிடமிருந்து, ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை நெடுஞ்சாலைத்துறையினர் மிகவும் குறைந்த விலைக்கு கையகப்படுத் தினர். இது விவசாயிகள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. திருநின்றவூரில் தொடங்கி திருவள்ளூர், திருத்தணி ஆகிய வட்டங்கள் வழியாக வெளி வட்ட சாலை அமைக்க நிலங்களை கையகப்படுத்தி பணிகள் நடைபெற்று வரு கிறது. திருவள்ளூர் மாவட் டத்தில் பணியாற்றிய பல மாவட்ட ஆட்சியர்களை சந்தித்து, கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைமையில், தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். விவ சாயிகளுக்கு நியாயமான, கூடுதல் இழப்பீடு வழங்காத மாவட்ட நிர்வாகம், காவல் துறையினரை வைத்து விவசாயிகளை ஒடுக்கு வதும், அடக்குமுறைகளை ஏவுவதுமாக உள்ளது. நிலங்களை கையகப் படுத்திய மூன்று வருடங்க ளுக்குள், கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டு மாவட்ட நிர்வா கத்திடம் விவசாயிகள் மனுக்கள் தாக்கல் செய்தி ருக்க வேண்டும். அப்போது தான் இழப்பீடு வழங்க முடி யும் என மாவட்ட நிர்வாகம் சட்டம் பேசுகிறது. ஆனால் விவசாயிகள் தங்கள் நிலங்களை கைய கப்படுத்திய உடனேயே, வழக்கறிஞர்கள் மூலம் தங்களுக்கான கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என மனு கொடுத்துள்ளனர். அந்த மனுக்கள் மீது ஆட்சியர் விசாரணை செய்து உரிய இழப்பீடு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் செய்யாமல் அலட்சியமாக இப்போது பதில் சொல்கி றார்கள். ஒரு சென்டு நிலம் வெறும் ஆயிரம் ரூபாய்க்கு என மிகவும் குறைவான விலைக்கு எடுத்துள்ளனர். தற்போதுள்ள மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஒரு சென்டு நிலத்திற்கு ரூ. 2 ஆயிரம் என்ற அளவை நிர்ணயித்துள்ளார். இது ஏற்க தக்கதல்ல. விவசாயிகளின் நிலம் தற்போது வெளி மார்கெட் நிலவரப்படி ஒரு செண்டு நிலம் பல லட்சம் ரூபாய் வரை விலை போகிறது. இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் கூடுதல் இழப்பீடாக குறைந்தது ஒரு செண்டு நிலத்திற்கு 50 ஆயிரத்திலிருந்து, ஒரு லட்சம் வரை இழப்பீடாக வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.சம்பத் தலைமையில் நடைபெற்ற வெளிநடப்பில், விவ சாயிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் என்.ஸ்ரீநாத், எஸ்.ஜெயச்சந்திரன், வாசுதேவன், ரவிக்குமார், நேதாஜி, ஏழுமலை, பாபு பாதிக்கப்பட்ட விவசாயிகள் அண்ணாமலை, பாபு, சந்தானம், சரவணன், பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.