விழுப்புரம், ஜூன் 27- விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றியத்திற்குட் பட்ட எழில் கிராமம் வீரக்கொடி வேளாளர் தெருவில் குடி யிருப்பவர்களுக்கு தடையில்லாமல் குடிநீர் வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வட்டச் செயலா ளர் எழில்ராஜா தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனுவாசனிடம் 40க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் 2 தினங்களுக்குள் குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் இதில் மாவட்டச் செயலாளர் ஆர்.டி.முருகன், வட்டத் தலைவர் உதயகுமார், சிபிஎம் வட்டச் செயலாளர் டி.முருகன், அரிஹரகுமார், கிளைச் செயலாளர் விஷபதாஸ், வாலிபர் சங்க வட்டத் தலைவர் வேங்கடபதி, முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.