திருவண்ணாமலை, ஜூன் 10- திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த குன்னத்துர் கிராமம் போளுர் தாலுக்கா களம்பூர் பகுதியில் ரவி என்பவர் டிகிரி முடித்து விட்டு மருத்துவம் பார்த்து வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தன. இதையடுத்து மாவட்ட சுகாதார அதிகாரி கள் மற்றும் ஆரணி மருத்துவனை அலுவலர் நந்தினி தலைமையில் சுகாதாரத் துறை யினர் அந்த தனியார் கிளினிக்கில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது களம்பூர் பகுதியை சேர்ந்த ரவி என்பவர் பி.ஏ. வரலாறு படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து நந்தினி ஆரணி கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகா ரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து போலி மருத்துவர் ரவியை கைது செய்தனர். பின்னர் மருத்துவத்திற்கு பயன்படுத்திய மாத்திரை மருந்து உள்ளிட்ட உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.