tamilnadu

img

20,000 பேருக்கு வேலைவாய்ப்பு முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து

சென்னை,டிச.1- 2019 உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் 19 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளும் 83,800 நபர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைத்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஐந்தாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 9 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழக முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெ ழுத்தானது. ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்ட 3 அமெரிக்க நிறுவனங்களின் திட்டங்களை தமிழக முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மேலும் 60 கோடி ரூபாய் மதிப்பில் 3 உயர்நிலை திறன் மேம்பாட்டு மையங்களையும், 28.43 கோடி ரூபாய் மதிப்பில் 2 புதிய தொழில் பயிற்சி நிலையங்களை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்த மும் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தாகின. மேலும், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் புதிய லோகாவையும்,தொழில் நிறு வனங்களுக்கான குறைதீர்க்க உதவும் தொழில் நண்பன் இணையதளத்தினையும் முதல்வர் தொடங்கி வைத்தார். மேலும் டி.ஆர்.டி.ஓ மற்றும் ஐ ஐ டி சென்னை இடையே தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் பெருவழித் திட்டத்திற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையழுத்தானது.  நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், வெவ்வேறு காரணங்களால் கடந்த காலங்க ளில் தொழிலை தொடர்ந்து நடத்த முடியாமல் சென்ற நிறுவனங்கள் கூட தற்போது தமிழக அரசு எடுத்துவரும் முயற்சிகளை பார்த்து மீண்டும் தொழிலை தொடர்ந்து நடத்த முன் வந்துள்ளதாக தெரிவித்தார். வெளிநாட்டில் வசித்து கொண்டு இங்கு தொழில் தொடங்க விரும்பும் தமிழர்களுக்கு ரத்தின கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.

;