tamilnadu

img

18 வயது வரை இலவச கல்வி வழங்க வலியுறுத்தல்

வேலூர், ஏப்.23-அனைவருக்கும் 18 வயது வரை இலவசக் கல்வி வழங்க வேண்டும் என்று விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் கேட்டுக் கொண்டார்.ஜி.விசுவநாதனை தலைவராகக் கொண்டு 7 ஆண்டுகளுக்கு முன்பு ‘அனைவருக்கும் உயர்கல்வி’ அறக்கட்டளை தொடங்கப் பட்டது. வேலூர், திருவண்ணாமலை மாவட்டங் கள், ஜமுனாமரத்தூர் ஆகிய பகுதிகளில் பள்ளிக் கல்வி முடித்து பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக உயர்கல்வி நிறுவனங்களில் சேர முடியாத மாணவர்க ளுக்கு உதவுவதே இதன் நோக்கம். அதன்படி, அந்த மாணவர்களுக்கு உயர் கல்வி பயில நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.உயர்கல்வி அறக் கட்டளை மூலம் இந்த ஆண்டு இரண்டாம் கட்டமாக கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி விஐடி பல்கலைக்கழகத்தில் உள்ள அண்ணா அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளை உறுப்பினர் மயிலாம்பிகை குமரகுரு வரவேற்றார். அறக்கட்டளையின் தலைவர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்து அறக்கட்டளையின் புதிய இணையதளத்தை தொடங்கி வைத்துப் பேசுகையில்,“ அனைவருக்கும் உயர்கல்வி அறக் கட்டளை மூலமாக கடந்த 7ஆண்டுகளாக வசதியற்ற குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் உயர் கல்விக்காக உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. உதவி கோருபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக் காண்டு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த ஆண்டு இரண்டாம் கட்டமாக 1,125 பேருக்கு ரூ.66 லட்சம் வழங்கப்படுகிறது. இதுவரை 5,146 பேருக்கு ரூ.5.75 கோடி வழங்கப் பட்டுள்ளது” என்றார்.நிகழ்ச்சியில் சென்னை எஸ்.வி.குளோபல் மில் தலைவர் எம்.எத்திராஜ் பங்கேற்று அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை மூலமாக கல்வி உதவித் தொகையை வழங்கி வாழ்த்திப் பேசினார்.

;