சென்னை, ஆக. 23 - தமிழ்நாட்டில், உழைக்கும் தொழிலாளர் குடும்பங்களின் கல்வி, பொருளாதார நிலை உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பின் பகுதிகள் வருமாறு:
நல வாரிய நலத்திட்ட உதவிகள்
20 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரி யங்களில் 16 லட்சத்து 499 உறுப்பினர்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 18 லட்சத்து 46 ஆயிரத்து 945 தொழிலாளர்களுக்கு 1,551 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவி கள் வழங்கப்பட்டுள்ளன.
ரூ. 14.99 கோடியில் தமிழ்நாடு தொழி லாளர் நல வாரியத்தின் நலத் திட்ட உதவிகள். தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் மட்டும் 26 ஆயிரத்து 649 தொழி லாளர்களுக்கு 14 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவி கள் வழங்கப்பட்டுள்ளன.
45 தொழில்களுக்கு குறைந்தபட்ச ஊதி யம் மறு நிர்ணயம் செய்யப்பட்டு; பல்வேறு தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர்.
உப்பு உற்பத்தி மற்றும் அதைச் சார்ந்த தொழில்கள் மற்றும் இணையவழி தற்சார்பு தொழிலில் ஈடுபடும் உடலுழைப்புத் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு உப்பளத் தொழிலாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு இணையவழி தற்சார்பு தொழிலாளர்கள் நல வாரியம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரி யங்களில் பதிவு செய்துள்ள தொழி லாளர்களின் ஓய்வூதியம் ரூ. 1,000 என்பது ரூ. 1,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தொழில் பிரச்சனைகளுக்கும் தீர்வு
சமரச அலுவலர்கள்- சமரசப் பேச்சு வார்த்தையின் மூலம் 41 நிறுவனங்களில் நடைபெறும் வேலை நிறுத்தங்கள் விலக்கிக் கொள்ளப் பட்டு 13,825 தொழி லாளர்களின் உரிமை மற்றும் பணிகள் பாதுகாக்கப்பட்டன.
சுமுகமாக தீர்த்து வைக்கப்பட்ட 2,930 வழக்குகள் உள்ளிட்ட 7,145 தொழில் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டு பல்வேறு தொழிற்சாலைகள் சார்ந்த வேலை நிறுத்தங்கள் திரும்பப் பெறப்பட்டன.
669 கொத்தடிமைத் தொழிலாளர்கள் இருந்து மீட்கப்பட்டவர்களுக்கு ரூ. 1 கோடியே 71 லட்சம் உடனடி நிவாரண தொகையாக வழங்கப்பட்டது. 889 குழந்தைத் தொழிலாளர்களாக இருந்த வர்கள் மீட்கப்பட்டு, குழந்தைகள் நலக் குழு வினரிடம், பெற்றோர்களிடமும் ஒப்படைக்க ப்பட்டனர்.
புதிய தொழிற்சாலைகள்
கடந்த மூன்றாண்டுகளில் 7,090 தொழிற் சாலைகள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள் ளன. 1996-ஆம் ஆண்டு கட்டடம் மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்கள் (முறைப்படுத் தல் மற்றும் பணி நிலைமைகள்) சட்டத் தின் கீழ் கட்டுமானப் பணிகளை மேற் கொள்ளும் 5,019 புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உதவித் தொகை
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக் கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 56,564 பொதுப் பயனாளிகளுக்கு ரூ.86.59 கோடியும், 14,420 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.36.92 கோடியும் உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளன.
11 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள்
ரூ. 97.55 கோடி செலவில் புதிதாக 11 இடங் களில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் துவங்கப்பட்டு கூடுதலாக 1,104 மாணவர் கள் சேர்க்கைக்கு வழிவகை செய்யப்பட்டுள் ளது. மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் 6.80 கோடி ரூபாய் செலவில் தமிழில் பாடப் புத்தகங்கள் உரு வாக்கப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை யிலான இந்த அரசு தொழிலாளர்கள் நல னில் முழு அக்கறை செலுத்தி தொழிலாளர் களையும், அவர்களின் குடும்பங்களையும் பாதுகாத்து வருவதால் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி இந்திய நாடு அளவில் சிறந்த முன்னேற்றங்களைக் கண்டு சாத னைகள் படைத்து வருவதை ஒன்றிய அர சின் நிதி ஆயோக் நிறுவனம் உட்பட பல்வேறு அமைப்புகள் பாராட்டி வருகின்றன.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.