tamilnadu

img

கொளத்தூர் ஊராட்சியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு: நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம், ஆக.8-   காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டம் கொளத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பள்ளம்பாக்கம், தேன்பாக்கம் உள்ளிட்ட கிரா மங்களில்  கடந்த  சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ள தால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு ள்ளனர். இதுகுறித்து சித்தா மூர் வட்டார வளர்ச்சி அலு வலகத்தில் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இந்நிலையில் பள்ளம்பாக்கம் கிராமத்தில் 20 ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமல் இருக்கும் நீர்த்தேக்கத் தொட்டியை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும்,   பள்ளம்பாக்கம்,  தேன்பாக்கம் கிராமங்களில் தற்போது உள்ள குடிநீர் குழாய்களை அகற்றிவிட்டு புதிய குழாய்கள் அமைக்க வேண்டும்,  

பழுதடைந்துள்ள தெரு விளக்குகளை சீர மைக்க வேண்டும்,  தேன் பாக்கத்தில் தனிநபர் கழிப்பிட ங்களை உடனடியாக கட்ட வேண்டும், கிராம மக்கள் பயன்படுத்த முடியாமல் இருக்கும் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் நிர்வாகி டி.சுதா தலைமை தாங்கினார். சிபிஎம் வட்டச் செயலாளர் எஸ்.ரவி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் க.புரு ஷோத்தமன், விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி கோவிந்தசாமி,  தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி வெள்ளி கண்ணன்  உள்ளிட்ட பலர் பேசினர். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.சண்முகம் நிறைவுரையாற்றினார். இதனைத் தொடர்ந்து செயற்பொறியாளருடன் பேச்சுவார்த்தை நடை பெற்றது. இதில் 2 நாட்களில் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்வதாக  எழுத்துப்பூர்வ மாக உறுதியளித்தார். பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.

;