tamilnadu

img

திமுக செயற்குழு கூட்டம்: க.அன்பழகன்

 சென்னை,ஜன.12- திமுக பொதுச்செயலாளர் க.அன்பழ கன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயற்குழு அவசரக் கூட்டம் சென்னை அண்ணா அறி வாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் வரும் 21 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். இந்த கூட்டத்தில் கட்சி ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்கப்படு கிறது. எனவே, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அடுத்து பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி களுக்கான தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்தச் செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

;